பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 207

ஆதாரமில்லாமல் வரையப்பட்டுள்ள இதிலும் ஆங்காங்கு சிவகங்கைச் சீமை அரசியலுக்கு முரணான பகுதிகள் சில பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

பக்கம் 66

'இனி வெள்ளைக்காரனின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது என்ற தீர்மானத்தில்தான் தளபதி வெள்ளயைன் சேர்வை சிவகங்கை மன்னரான செல்லத்தேவரோடு கலந்து ஆலோசித்து டச்சுக்காரர்களை நண்பனாக ஆக்கிக் கொண்டார்.'

“சேதுபதியின் சீமைத் தளபதி வெள்ளையன் சேர்வை காலத்தில் சிவகங்கை மன்னராக இருந்தவர் முத்து வடுகனாத தேவர். சிவகங்கையில் செல்லமுத்துத் தேவர் என்ற மன்னரும் இருந்தது இல்லை. குறிப்பிட்ட நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.”

பக்கம் 75

"சேது நாட்டில் ராணி முத்துத் தளவாய் நாச்சியாரையும். ஒன்பதே வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியையும் திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தான். இந்நிகழ்ச்சியால் பேரதிர்ச்சியுள்ள சிவகங்கை அரசி வேலு நாச்சியார், தனது செல்வாக்கினால் நவாப்பின் கொடுங்கோன்மையை மறைமுகமாக மக்களிடம் எடுத்துக் கூறுவதில் தீவிரமாக முனைந்தார்."

ஆதாரமற்ற செய்தி. சேதுபதி ராணியும் சேதுபதி இளவரசரும் கைதான இருபது நாட்களில், ராணி வேலுநாச்சியார், கணவரை இழந்து விருபாட்சியில் தஞ்சமடைந்து விட்டார் என்பது வரலாறு. பக்கம் 88

"...மறவர் குல மக்கள், ஈட்டுத் தொகையாக ரூ. 1,50,000 கொடுத்தால் ராணி நாச்சியாரையும் சேதுபதி இளவரசரையும் விடுதலை செய்வதாக நவாப் அறிவித்தார். எனவே வீராங்கனை வேலுநாச்சியார் தாம் சேகரித்து வைத்திருந்த தொகையின் ஒரு பகுதியை அனுப்பி வைத்தார். இளவரசரும் ராணியும் விடுவிக்கப்பட்டு சேதுநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.'

புதிய வரலாறு. ஆசிரியரது அருமையான கற்பனை சரியான செய்திக்கு பார்க்க இந்த நூல் ஆசிரியரது “விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்" (1987)

பக்கம் 92

'... நாட்டைவிட்டு திண்டுக்கல்லில் தங்கி இருக்கும் ராணி வேலு நாச்சியாரிடம் நாட்டை ஒப்படைக்க முடிவு செய்தான் (நவாப்). வீராங்கனை வேலு நாச்சியாரை வரவழைத்து சிவகங்கைச் சீமையை