பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

சென்ற அந்த மனிதன் வான்வெளியை அண்ணாந்து நோக்கினான். இன்றும் நிலவு உதயமாகவில்லை.
அந்த பெண்மணி உறங்கிக் கொண்டிருந்த குகையை நாடிச் சென்றான். அவள் கோரிக்கையற்று கிடக்கும் வேரில் பழுத்த பலாவாகக் காட்சி அளித்தாள். அதனை சுவைத்தால் என்னயென்று எண்ணம் அவனுக்கு தோன்றியது.
மேலாடை விலகியிருந்தது. கணுக்காலுக்குக் கீழே ஆடையில்லை. அயர்ந்த தூக்கம். பூந்தனங்கள் கொழிப்புடன் கோபுரக் கலசம் போல காட்சி அளித்தன. அன்றோரு நாள் இரவு அவன் கண்ட அவளது பிறந்த மேனிக் காட்சி நினைவுக்கு வந்தது. நாவில் இப்போது நீர் ஊறியது. ஒருவித வேகச் சுழிப்புடன் உள்ளே நுழைந்து அவளது திரண்ட தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.
திருதிருவென்று விழித்த அவளுக்கு உண்மை புரிந்து விட்டது. "இப்பொழுது உங்களுக்கு என்ன தேவை?” - அவள்.
'நீ - அவன்.
'இப்போதே தேவையா?" - அவள்.
"ஆம்" - அவன்.
"சுதந்திர ஒளி - தமிழ் ஒளி இந்த நாட்டில் படரட்டும்- படரவிட முயற்சி செய்யுங்கள். அப்போது நான் உங்கள் மடியில் தலை வைத்து துங்குவேன்” - அவளுடைய பதில்.

இங்கே சுட்டப் பெற்ற இந்த மூன்று காட்சிகளையும் படித்துப் பார்த்த வாசகர்கள், இதனை ஏதோ ஹாலிவுட் திரைப்படத் தொகுப்பாகத்தான் கருதுவார்கள். ஆனால் இது ஒரு சிறந்த தமிழ்ப் புதினப் படைப்பாளர் ஒருவரது படைப்பில் இருந்து தொகுக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆம். திரு. கோவி. மணிசேகரன் என்பவரால் எழுதப்பெற்று சென்னை வானதி பதிப்பகத்தினரால் 1986-ல் வெளியிடப் பெற்ற சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் (ராணி வேலு நாச்சியார்) என்ற நூல்தான் அந்தப் புதினம்.

இன்னும் ஒரு முக்கியமான செய்தி மறந்துவிடக் கூடாத செய்தி, மேலே கண்ட காட்சிகளிலும் நாம் காண்கின்ற கதாபாத்திரங்கள் - இளைஞன் வெள்ளை மருது என்ற பெரிய மருது சேர்வைகாரர், ராணி வேலுநாச்சியார். ஆம். சந்தேகமே இல்லை. சிவகங்கை சீமையில் சுதந்திர முழக்கமிட்ட சிம்மங்கள். ஏன்? இந்திய விடுதலை இயக்கத்தின் இணையற்ற தியாகிகள்; வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வெடிமருந்து பேராண்மை வெடித்து சிதறி சின்னாபின்னமாகும்படி மக்களின் அசுர