பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 215

தாமோதரம்பிள்ளை கி.பி.1772-ல் ஆற்காடு - கும்பெனி படையெடுப்பின்போது உயிருடன் இல்லை. அதற்கு முன்னரே இறந்துவிட்டார். இந்தப் படையெடுப்பின்பொழுது ராணி முத்து திருவாபி நாச்சியாருடன் இருந்த சமரசப் பேச்சில் கலந்து கொண்ட அமைச்சர் பிச்சைபிள்ளை, பேச்சுக்கள் தோல்வியுற்ற பிறகு தான் பரங்கியரின் இராமநாதபுரம் மீதான கோட்டைத் தாக்குதல் 1.6.1772, 2.6.1772 இரு நாட்கள் மட்டும் (பார்க்க: Major Vibart - History of Madras Engineers and Pioneers.) பக்கம் 414

'ஓ வேலுநாச்சி. சிம்ம சொப்பனமாக உச்சரித்தனர் ராணி வேலுநாச்சியின் வீரப் போர்க் காட்சி, கண்டோர் நெஞ்சில் கனலைப் பரப்பியது!”
“மறுநாள் மீண்டும் போர் தொடங்கியது. இப்படியாகச் சில தினங்கள் வரை போர் முடிவற்று நடந்து கொண்டே இருந்தது”

நூலாசிரியரது சிறந்த கற்பனைக்கு இந்த எழுத்துக்களும் நல்ல எடுத்துக்காட்டு இந்தக் காளையார் கோயில் கோட்டைப் போர் பற்றிய கும்பெனியாரது ஆவணங்கள் முழுமையாகவும், தெளிவாகவும் உள்ளன. சென்னை தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில், 25.6.1772 நடைபெற்ற காளையார் கோயில் போர் ஒரு நாளில் முடிவடைந்தது. மன்னர் முத்து வடுகநாதருடைய தியாகத்துடன் இந்தப் போரில் ராணி வேலு நாச்சியாருக்கு எந்தப் பங்கும் இல்லை. அண்மைக் கால வரலாற்றை தமது இஷ்டம் போல கற்பனைக் காட்சியாகத் திரித்து மறைத்து எழுதுவது மன்னிக்க முடியாத குற்றம். (பார்க்க: தமிழ்நாடு ஆவணக் காப்பக ஆவணங்கள் - Military Consultations Vol. 42/26.6.1772/pp 414-607)

பக்கம்: 423-426

'காளையார் கோயிலுக்கு மேற்கே மூன்று கல் தொலைவிலிருக்கும். 'சுப்புணி சவுக்கு என்று அந்நாளையில் விளங்கிய சவுக்குத் தோப்பை அடைந்தனர்...'
'மறுநாள் அவர்கள் அனைவரும் மதுரையை அடைந்தனர். ஏறத்தாழ மூன்று மாத காலம் இப்படியாகக் கழிந்தது'
"எப்படியோ இரண்டாண்டு காலமாக அவர்கள் தலைமறைவாக வாழ்ந்தனர்."

நூலாசிரியர் அளித்துள்ள இந்தப் புதுமையான நிகழ்ச்சிகளும் எந்த வரலாற்று ஆவணங்களிலும் காணப்படாதவை. நூலாசிரியருக்கு