பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 237


பக்கம்: 147, 148

"...காளையார் கோயிலில் மருது பாண்டியர்கள் நிகழ்த்திய முதல் போர் சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை ஆங்கிலத் தளபதிகள் சுமித், பான்ஜோஜர் களத்தில் கி.பி.1772-ல் நிகழ்ந்தது. அதே காளையார் கோவிலில் இரண்டாவது போரை மருது பாண்டியர்கள் சந்தித்தனர்.

காளையார் கோவிலில் 25.6.1772-ல் நடந்த போரில் மன்னர் முத்து வடுகநாதரது தலைமையில் நின்று போராடிய சிவகங்கை சீமை மறவர்களது செங்குருதியினால் காளையார் கோவில் மண் சிவப்பேறியது. மன்னரும் வீர மரணம் அடைந்தார். இது காலத்தால் அழிக்க இயலாத வரலாற்று ஏடு.

சாதாரண மனிதர்களும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியையும் சிவகங்கை மன்னரது தியாகத்தையும் எந்த வகையிலும் சிறுமைப்படுத்திவிட முடியாது. அது சூரிய வெளிச்சத்திற்கு எதிரேஒளிரும் மின்மினிப்பூச்சியின் முயற்சியாகத்தான் இருக்க முடியும். ஆனால், அரிச்சந்திர வாக்காக அம்மானை பாடியுள்ளவரோ, காளையார் கோவிலில் இரத்தக்களரி எதுவுமே நடக்காதது போல, பாடியிருப்பதைப் படியுங்கள்.

"... கும்பெனியார்
அடர்ந்தார்கள் காளையார் ஆலயத்தைச் சுற்றிவந்து
படர்ந்தார் திசையனைத்தும் படர்ந்து வருமுன்னேதான்
அங்கேதான் காளையார் ஆலயத்தின் னுள்ளேதான்
மூங்கையுடன் முத்து வடுகநாத துரை
பந்தயமாயத்தாமிருவர் பஞ்சணை மெத்தையின் மேல்
சந்தோசமாயிருந்து சதுரங்கம் பார்ப்பளவில்

"..... கோட்டைனைப்
பிடித்தார் மயிலேறி பெரியகொடிக் செண்டாக்கள்
அடித்தார். பீரங்கிகளில் அனேகமெனக் குண்டு விட்டு
எழுப்பினார் சத்தம்....
"நாடுபுகழ் வடுகராசனுமே மீது சத்தம்
எனவே எண்ணி எழுந்து திடுக்கிட்டவனும்
மாதுதனை கைப்பிடித்து வர வெளியே
வரவே உள்மண்டபத்து வாசல்வெளி மூலைதன்னில்
உரமாய் வரும் போது உபாயமுள்ள கம்பெனியார்
மதிலேறி நின்று மாட்டியனும் பூரியும்தான்
........கலீரெனவே சுட்டானே பூரிதுரை
(சிவகங்கை அம்மானை பக்கம் 126-127)

அந்தக் குண்டு பட்டு மன்னர் முத்து வடுகநாதர் இறந்தார் என்று வரைந்துள்ளார். இவரைப் பற்றி மருது பாண்டியர் மன்னர் ஆசிரியர்.