பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 239


"ஆனாலும் பொறாதும் அகற்றுவோம் நமது துரை
சாமி போனாலும் தளம் போய் விசனமில்லை
உலோகமாதாவை நொடிக்குள் தப்ப வைத்து
சாகாமல் காத்தல் தருமமே யாகுமதல்...'

(சிவகங்கை அம்மானை பக்கம் 129)

"தாட்டிக ரிருவரும் செத்தா ரென்று
தளவாய் இருவரும் தாமறிந்து
கையில் வளரியைத் தானெறிந்து
கன்னத்தில் அறைந்து அழுதலறி
வையத்திலினிச் சண்டையென்ன
வந்த படையெல்லாம் போங்களென்று
அண்ணனும் தம்பியும் யிருபேரும்...'

(சிவகங்கை கும்மி பக்கம் 19)

அப்புறம், மருது வீரர் போர் தொடர்ந்து பற்றிய செய்திகளை மருது பாண்டிய மன்னர், நூலாசிரியர் எங்கிருந்து பெற்றார்? என்ன ஆதாரம்? அவருக்கு மட்டும் தெரிந்து இருந்ததால் தானே தெளிவாக வரைந்துள்ளர் நிச்சயமாக இது அவரது கற்பனையில் கண்ட போராகத் தானிருக்க வேண்டும்.

பக்கம்: 157 - 158

" ... சேதுபதி இளைஞர் அவரிடம் வேலு நாச்சியாரது புதல்வி வெள்ளச்சி பற்றிய ஆசைக் கனவுகளை நாளுக்கு நாள், கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திடச் செய்தார் கெளரிவல்லவர்."
".. பாரம்பரிய பெருமை மிக்க சேதுபதி எப்படி அவ்வளவு எளிதாக கெளரிவல்லவரின் சூழ்ச்சியில் விழுந்தார் என்பது விந்தையே, என்றாலும் நடந்து முடிந்து விட்ட வரலாற்று நிகழ்ச்சியை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்."

இவ்விதம் 'சூர்ப்பனகை சூழ்ச்சிப்படலம்' என்ற தலைப்பில் எழுதியுள்ளார். படிப்பதற்கு இலக்கியம் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வரலாற்றை, கற்பனையும் ஒப்பனையும் மிக்கதாகத் திரித்து விடமுடியாதே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சமுதாயத்தின் பிரதிநிதியாகச் சித்தரிக்கப்பட்ட, "அரக்கர் செய்த பாவமும் அல்லவை செய்த அறமும் 'ஆன சூர்ப்பனகை, இராவணன் ஆகியோருடன் படமாத்துார் கெளரி வல்லவரையும் சேதுபதி மன்னரையும் ஒப்பிட்டுக் காட்டியிருப்பது அருவருக்கத் தக்கதாக இல்லையா?