பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


பக்கம் 488

'மருதிருவருடன் அவரும் 24-10-1801 தேதி அன்று திருப்புத்துரில் தூக்கில் போடப்பட்டார்."

மீளங்குடி முத்துக் கருப்பத் தேவர் பற்றி மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர் வரைந்துள்ளவை பச்சை பொய் என்பதை கும்பெனியாரது ஆவணங்கள் உறுதியளிக்கின்றன. மீனங்குடி முத்துக் கருப்பத் தேவர் திருமணமானவர். அவருக்கு ஒரே தம்பி மட்டும் இருந்தார். பெயர் கனக சபாபதித் தேவர். கி.பி.1799-ம் ஆண்டு கிளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டதற்காக 16.11.1801-ம் தேதியன்று அவர் அபிராமத்தில் கும்பெனியரால் தூக்கிலிடப்பட்டார். (பார்க்க மாவீரர் மருது பாண்டியர் பக்கம் 160) காளையார் கோவில் போர் முழுத் தோல்வியில் முடிந்தவுடன், மருதிருவர் அணியில் கும்பெனியாரது பிடியில் சிக்காமல் தப்பித்தவர்கள் மாவீரன் மயிலப்பன் சேர்வையும், மீனங்குடி முத்துக் கருப்பத் தேவரும் தான். காரணம், காளையர் கோவில் போரின் பொழுது அவர்கள் இருவரும் இராமநாதபுரம் சீமையில் கும்பெனியாரது இலக்குகளை அழிப்பதில் ஈடுபட்டு இருந்தனர். பின்னர் முத்துக் கருப்பத் தேவரை, அவர் போட்டி அரசு அமைத்து இருந்த இராமநாதபுரம் சீமையின் குத்தகை நாட்டில் (அனுமந்தக்குடி, ஒரூர்பகுதி) கி.பி.1803-ல் கைது செய்யப்பட்டு இராமநாதபுரம் கோட்டையில் தளபதி மார்டின் கண்காணிப்பில் காவலில் வைக்கப்பட்டார்.

(பார்க்க Madura Collectorate Records Vol. 1146/23-9-1803/பக்கம்.39)

காவலில் வைக்கப்பட்ட அவரது குடும்பத்தினர்.
1 முத்துக் கருப்பத் தேவர் 1
2 அவரது தாயார் 1
3 மனைவிகள் 2
4 அவரது குழந்தைகள் 4
5 முத்துக் கருப்பத் தேவரது தங்கை 1
6 முத்துக் கருப்பத் தேவரது தங்கை கணவர் 1
ஷயாரின் குழந்தைகள் 3
6 தியாகியான தம்பி கனகசபைத் தேவரது மனைவி 1
7 ஷையாரது கைக்குழந்தை 1
8 பணியாட்கள், ஆடவர், மகளிர் 10
---
மொத்தம் 26
---


(பார்க்க: மாவீரர் மருது பாண்டியர் பக்கம் 160 தமிழ்நாடு ஆவணக் காப்பக பதிவேடு, எம்.டி.ஆர். தொகுதி எண் 1146/1803, 24.10.1803/ பக்கம் 9)