பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


அதிலே தங்களை இணைத்துக் கொண்ட அவர்களது தியாகத்திலும் நான் மிகவும் ஈடுபாடு கொண்டு, 1989-ல் 'மாவீரர் மருது பாண்டியர் என்ற நூலை வரைந்தேன். எனது நான்காண்டு கால உழைப்பினால் உருவான அந்த நூலை 'சிறந்த வரலாற்று நூலாக தேர்வு செய்து 16.1.1991-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முதல்வர்.அவர்களால் எனக்கு பரிசும் பாராட்டும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் மக்களது மாபெரும் தலைவர்களைப் புகழ்ந்து பல்லாண்டு பாடுவதிலும் எனக்கு உடன்பாடுதான். அதேநேரத்தில், அண்மை நூற்றாண்டில் இருந்து மறைந்த அந்த வரலாற்று நாயகர்களை, வரலாற்றுக்கு முரணான முறையில், வரலாற்றுச் சான்றுகளுக்கும் தடையங்களுக்கும் சம்பந்தமில்லாத வகையில், சுயகற்பனை அடிப்படையில் சித்தரிப்பது என்பதை யாவரும் சரித்திரப் புரட்டாகத்தான் கொள்வர். ஆகையால் அந்த நூலாசிரியரது எழுத்துக்களுக்கு இங்கே வரலாற்று ஆதாரங்களுடன் மறுப்பு கொடுத்து இருக்கிறேன். இந்தப் பகுதியில் எனது இரண்டாவது நூலான 'விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (இதுவும் தமிழ்நாடு அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான முதற் பரிசும், பாராட்டும் 15.1.1989-ல் பெற்றது) நூலில் கண்ட ஒரு பகுதிக்கு விளக்கம் தர வேண்டிய நிலையில் இதனை எழுதுகிறேன். மருது பாண்டியர்களைப் பற்றி "கீழிறக்கிகாட்ட வேண்டும் என்பது எனது இலக்கு அல்ல. இந்த நூலின் நோக்கும் அது அல்ல.

வரலாற்று நாயகர்கள் மனிதர்கள்தான் என்பதை மறந்து விடுதல் கூடாது, தங்களது அவசர முடிவுகளால், சந்தர்ப்ப நிர்ப்பந்தம் போன்ற சூழ்நிலையில் தவறுகளைச் செய்துள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் பக்கத்து பாளையங்களில் கொள்ளையிட்டார் அல்லது அவரது பிரதானி சிவசுப்பிரமணிய பிள்ளையின் கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. ஆங்கிலேயரது மூச்சைக்கூட பொறுக்காத எதிர்ப்பு அணியில், சிவகிரி போன்ற நெல்லைப் பாளையக்காரர்களையெல்லாம் திரட்டிய பொழுது, பக்கத்தில் உள்ள சிவகங்கைச் சீமை ஆட்சியாளர்களை தனது அணிக்கு கொண்டு வர தவறிவிட்டார் என்பது மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் மீதான குற்றச்சாட்டு. மற்றும் திவான் பூர்ணையா போன்ற பழமைவாதிகள் தனது தீவிரக் கொள்கைகளுக்கு இணக்கமாக இல்லையென்பதை நன்கு அறிந்து இருந்தும் தீரர் திப்பு சுல்தான் அவர்களையே இறுதிவரை நம்பி நின்றது அவரது வீழ்ச்சிக்கு காரணமாயிற்று என்பது திப்பு சுல்தான் மீதான குற்றச்சாட்டு.

பக்கம்: 490

'சிவகங்கையின் ஆதி மன்னர் சசிவர்ண தேவரின் வாரிசுதான் மருது