பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 9


திருமயம் கோட்டை சேதுபதி சீமையின் பாதுகாப்பு நிலையில் இருந்து விடுபட்ட பிறகு, நாலுகோட்டை பாளையம் அந்த பாதுகாப்புச் சங்கிலியில் வலுவான இணைப்பாக இருந்து வந்தது. அதுவும் பெரிய உடையாத்தேவரது செம்மையான கண்காணிப்பால்.

பெரிய உடையாத் தேவர் மரணத்தினால் துடி துடித்து துவண்டு வருந்தியவர் சிந்தாமணி நாச்சியார் ஆவர். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பலவந்தமாக இராமநாதபுரத்தில் இருந்து கவர்ந்து வந்து பெரிய உடையாத் தேவர் அவரைக் கட்டாய திருமணம் செய்த பொழுது அடைந்த வேதனையைவிட பன்மடங்கு துக்கத்தில் ஆழ்ந்து வருந்தினார். இத்தனை காலமாக பெரிய உடையாத் தேவர் அவர் மீது கொண்டிருந்த பாசம், பற்று, அன்பு, காதல் எல்லாமே நொடி நேரக் கனவாகக் கரைந்து விட்டதை நினைக்கும் பொழுது இந்த உலகத்தில் வாழ்வதற்கு எந்த நியாயமும் இல்லையென அவருக்குப் பட்டது. தேவருடன் வாழ்ந்த பத்தாண்டு வாழ்க்கையின் முத்திரையாகப் பெற்றெடுத்த ஏழு வயதுப் பாலகன் செல்வரகுநாதன் இருப்பது உண்மைதான். தந்தையைச் சரியாக அறியாத பாலகனுடன் பயின்று விளையாட உடன் பிறவாத சகோதரன் சசிவர்ணம் இருக்கிறானே! பிள்ளைப் பாசத்துடன் அவனை வளர்ப்பதற்கு சிற்றன்னை கோவனூர் நாச்சியார் இருக்கின்றாளே! ஆனால் அவளுக்கு... தனக்கு ஒரே பிடிபாடாக இருந்த கணவன் போன பிறகு. சிந்தாமணி நாச்சியாரது சிந்தனை இவ்விதம் சிறகடித்து பறந்தது.

அந்த பெரிய வீட்டின் முகப்பில், அகலமான நாற்காலி ஒன்றில் படுத்து அயர்ந்து உறங்கி கொண்டு இருப்பவர் போல காட்சியளித்த பெரிய உடையாத் தேவரது அலங்காரம் செய்யப்பட்ட உடலில் அவரது கண்கள் பதிந்து நின்றன.

சிறிது நேரத்தில் தாரை தப்பட்டை முழங்கின. வாங்காவாத்தியம் நீண்டு ஒலித்தது. சங்கு முழங்கியது. பெண்களது குலவை சத்தம். நடைமாத்து சேலைகள் தொடர்ச்சியாக விரிக்கப்பட்டன. துக்கம் விசாரிக்க வந்த கூட்டம், மெதுவாக நகர்ந்தது. நாலுகோட்டைப் பாளையக்காரரின் இறுதிப்பயணம் தொடங்கியது. நாலுகோட்டை ஊருக்கு கிழக்கே உள்ள கந்தமாதனப் பொய்கைக் கரையில் அந்திம கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சந்தனக் கட்டைகளால் அடுக்கி அமைத்த சிதையில் தேவரது சடலம் வைக்கப்பட்டது. ஏற்கனவே, தெளிக்கப்பட்ட நெய்யில் குளித்த தீயின் நாக்குகள், பயங்கரமாகக் கொழுந்து விட்டு எரியத் துவங்கின. சிறிய துரும்பு கூட தனது கணவரது உடலுக்கு தீங்கிழைக்க கூடாது என எண்ணும் சிந்தாமணி நாச்சியார், தனது கணவர் உடலைச் சுற்றி தீக்கொழுந்துகள் தொடர்வதை எப்படி சகித்துக் கொள்வார்? தனது அன்பு மகன் செல்வ ரெகுநாதனை ஒருமுறை பற்றி அனைத்து மிகுந்த வாஞ்சையுடன் முத்தங்கள் சொரிந்தார். அவர் அணிந்து இருந்த நகைகளை அவனது கைகளில் திணித்து விட்டு கணவரது சிதையினுள்