பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


புகுந்து செந்தழலில் மறைந்து விட்டார்.[1]

பெற்ற தந்தையையும், வளர்த்த தாயையும் இழந்து தனிமை ஆகிவிட்ட சசிவர்ணத் தேவரது கண்களில் வழிந்த கண்ணீர், "ஆத்தா... ஆத்தா" என்ற செல்வரெகுநாதனது அவலக்குரலுடன் அடங்கி விட்டது.

இராமநாதபுரத்தில்

இந்த நிகழ்ச்சிகளால் பாதிக்கப்படாது புழுங்கிய மனத்துடன் அலைந்துகொண்டு இருந்த பவானி சங்கரத் தேவர். இப்பொழுது தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார். ஆனால் சேதுபதி பட்டத்தில் இருந்து மன்னரை அகற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே! பவானி சங்கரத் தேவருக்கு உறுதுணையாக இருந்த புதுக்கோட்டை தொண்டைமானிடம் சேது நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான ஆள் பலமும், பொருள் வசதியும் இல்லை. ஆதலால், அப்பொழுது சேதுபதி மன்னருக்கு நிகராக ஆற்றல் பெற்றிருந்த அண்டை அரசுகளான மதுரை நாயக்கரிடம், முயற்சித்தும் பலன் இல்லாததால், தஞ்சை மன்னர் துல்ஜாஜியிடம் உதவி கோரினர். அவரும் சில நிபந்தனை அடிப்படையில் சேது நாட்டுப் போருக்கு படை உதவி அளிக்க முன் வந்தார்.[2] அதாவது பவானி சங்கரத் தேவர் போரில் வெற்றி பெற்று சேதுபதியானவுடன் சேதுநாட்டின் வடபகுதியினை - தெற்கே பாம்பாற்றில் இருந்து வடக்கே திருவாரூர் வரையான வளமிக்க நிலபரப்பை தஞ்சை அரசிடம் ஒப்படைத்து விடுதல் வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை.

படை உதவி பெற்று பவானி சங்கரத் தேவர் சேது நாட்டில் அறந்தாங்கிக் கோட்டையை திடீரெனத் தாக்கி கைப்பற்றியதுடன் சேது நாட்டின் வடபகுதியை சேதுபதி மன்னரிடமிருந்து துண்டித்து விட்டார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பெரும் படையுடன் சேதுபதி மன்னர் அறந்தாங்கி நோக்கிப் புறப்பட்டார். அங்கு போரில் ஈடுபட்டு இருக்கும்பொழுது அவரை அம்மை நோய் தாக்கியதால் அவர் இராமநாதபுரம் கோட்டைக்கு திரும்ப வேண்டியதாயிற்று. சில நாட்களில் அந்த நோய்க்கு சேதுபதி மன்னர் பலியானார்.[3] அடுத்து, பவானி சங்கரத் தேவர் எளிதாக இராமநாதபுரத்தைக் கைப்பற்றியதுடன் புதிதாகப் பட்டம் சூடிய சுந்தரரேசத் தேவர் என்ற சேதுபதியைக் கொன்றுவிட்டு அவரே சேதுபதியானார்.[4] அவரது பதினெட்டு ஆண்டு கால பகல் கனவு இப்பொழுது நிஜமாகிவிட்டது. பவானி சங்கரத்


  1. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள்
  2. Raja Rama Rao - Manual of Ramnad Sainnsthanam (1891) P: 239
  3. Ibid. P:240
  4. Ibid.