பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 19

நாடு, தென்னாலை நாடு, இராஜகம்பீரநாடு, சுரபி நாடு, கானப்பேர்நாடு, பாலையூர், மங்கல நாடு, புனல்பரளை நாடு, கல்லக நாடு என்ற நாடுகள் அமைந்து அணி செய்தன.

இவைகளுக்கு அடுத்து சிறு பரப்பு, வள நாடாகும். கேரள சிங்க வளநாடு, ராஜேந்திர மங்கல வளநாடு என்பன போன்று. இவைகளுக்கு இணையான இன்னொரு தொகுப்பு கூற்றம் எனப்பட்டது. இந்த புதிய சீமையில் கானப்பேர் கூற்றம், முத்துார் கூற்றம், பாகனூர் கூற்றம், துகலுர் கூற்றம் என்பன அன்றயை வழக்கில் இருந்த கூற்றங்கள் ஆகும். இந்த பழமையான நிலப்பரப்புகளைத் தவிர மாகாணங்கள் என்ற புதிய தொகுப்பும், பின்னர் இருந்து வந்தது தெரிய வருகிறது. சிவகங்கைச் சீமையின் ஆவணங்களிலிருந்து இந்த மாகாணம் என்ற ஊர்த் தொகுப்பு மிக பிற்பட்ட கால அமைப்புகள் என்பது தெரிய வருகின்றன. அவை திருப்புவனம், முத்து நாடு, எழுவன் கோட்டை, அழகாபுரி, மேல மாகாணம், நாலு கோட்டை, எமனேஸ்வரம், பொன்னொளிக் கோட்டை, பாளையூர் என்பனவாகும்.

இந்த மன்னரது ஆட்சியில் திருக்கோயில் தர்மமாக பல ஊர்கள் இறையிலியாக வழங்கப்பட்டன. அன்றாட பூஜை, நைவேத்தியம் போன்ற கைங்கர்யங்களுக்கும் வேறு பல திருப்பணிகளுக்கும் இந்த ஊர்களின் வருவாய் பயன்படுத்தப்பட்டது. மேலும் திருமடங்களும், அன்ன சத்திரங்களும் இந்த மன்னரது தண்ணளியில் தங்களது திருப்பணிகளைச் சிறப்பாக தொடர்ந்து வந்தன. இவரது இந்த நற்பணிகளுக்கு ஊக்குவிப்பும், உரிய ஆலோசனையையும் வழங்கி உதவும் பிரதானியாக முத்துகுமார பிள்ளை என்பவர் பணியாற்றி வந்தார்.[1] தனது இறுதி காலத்தை இவ்விதம் சிறந்த ஆன்மிகப் பணிகளில் செலவழித்து வந்த இந்த மன்னர், ஒரு நாள் பிரான்மலை சென்றார். மங்கை பாகர் சுவாமியையும் தேங்குழல் அம்பிகையையும் தரிசனம் செய்து விட்டு பல்லக்கில் சிவகங்கை திரும்பிக் கொண்டிருந்தார். மறைந்திருந்து குறிபார்த்து எறிந்த எதிரி ஒருவனது கட்டாரி தாக்குதலினால் உயிர்துறந்தார்.

சிவகங்கைத் தன்னரசைத் தோற்றுவித்த சசிவர்ண பெரிய உடையாத்தேவரது செம்மையான ஆட்சி கி.பி. 1749 வரை (இருபது ஆண்டுகள்) நீடித்தன. புதிய சிவகங்கைச் சீமை பல துறைகளிலும் முன்னேறுவதற்கு வழிவகுத்தது. ஒரு நாட்டின் வரலாற்றில் இருபது ஆண்டுகள் என்பது ஒரு சிறு கால வரம்புதான். என்றாலும், மன்னர் சசிவர்ணத் தேவர், தமது முந்தைய சேதுபதி சீமையின் தொண்டித் துறைமுகம், வெள்ளிக்குறிச்சி ஆளுநர் பணிகளில் பெற்று இருந்த நிர்வாக


  1. செல்வரகுநாதன் கோட்டை ஆவணங்கள்.