பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

11. ன் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்கொடி புலிக்கொடியுடையான் மு
12. ம்மதயானையான் செங்காவி குடை செங்காவிக் கொடி செங்காவி
13. ச் சிவிகையான் அசுவபதி கெசபதி நரபதி யிரவிய கெற்பயாசி ரெ
14. குனாதச் சேதுபதியவ
15. ர்கள் பிறிதிவிராச்சி
16. ய பரிபாலனம் ப
17. ண்ணியருளாநி
18. ன்ற கலியுக சகா
19. த்தாம் 4864
20. சாலிவாகன ச
21. காத்தம் 1685
22. இதன்மேற் செல்லா
23. நின்ற சுபானு ஸ்ரீ சித்திரை மீ 4 தீ புதவாரமும் அமாவாசியும் அக
24. வதியும் சுபயோக சுபகரணமுங் கூடின சூரியோதபரக புண்
25. னிய காலத்தில் பாண்டி தேசத்தில் பொதியமா மலையா
26. ன் வையை ஆறுடையான் புனப்பிரளை நாடன் குளந்தை நகரா
27. திபன் முல்லை மாளிகையான் பஞ்சகதி யிவுளியான் மும்மதயா
28. னையான் அனுமக்கொடி கெருடக்கொடி புலிக்கொடி கட்டி
29. ய புரவலன் மும்முரச திரு முன்றிலான் திக்கெங்கு மாணை
30. செலுத்திய சிங்கம் மேனாட்டுப் புலி தாலிக்கு வேலி தளஞ்சி
31. ங்கம் இளஞ்சிங்கம் இரவிகுல சேகரன் ஆற்றுப் பாச்சி கடலி
32. ற் பாச்சி தொண்டியந்துறை காவலன் வாசபேயாகன் அரசு
33. நிலையிட்ட விசைய ரெகுநாத சசிவற்னப் பெரிய உடையா

இரண்டாம் பக்கம்

34. த் தேவரவர்கள் புத்திரன் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரி
35. ய உடையாத் தேவரவர்கள் தருமபுரம் குருஞான சம்பந்த தே
36. சிகர் சீஷராண காசிவாசி குமரகுருபரத் தம்பிரானவர்
37. களுக்குத் தர்ம சாசனம் தாம்பிர சாசனப் பட்டயங் கொடுத்தப்படி
38. தற்ம சாசனமாவது காசியிலே பெரிய உடையாத் தேவர் மடமு
39. ங் கட்டிப் பிராமண போசன மகேசுர பூசை அன்னதா
40. னம் நடப்பிவிக்கிறதினாலே இந்தத் தற்மத்தக்கு விட்
41. டுக் கொடுத்த கிராமமாவது பாண்டி தேசத்தில் கரு
42. த்துக் கோட்டை நாட்டில் துகவூர்க் கூற்றத்து வ
43. ள்ளைக்குளம் கிறாமத்துக் கெல்லையாவது கீள்பா
44. ற்கெல்கை கருமேனியம்மன் கோவில் புஞ்சைக்கு
45. ம் அரமனைக் கரைக்கண்மா யுள்வாய்க்கு மேற்கு தெ
46. ன் பாற்கெல்லை ஒச்சந்தட்டுப் புஞ்சைக்கும் துகவூர்
47. க் குளக்காலுக்கும் வடக்கு மேற்பாற்கெல்லை குச்சனா