பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 73

23. னற விரோதி ஸ்ரீ அற்பசி மாதம் 25உ ஸ்ரீமது அரசு நிலையிட்ட விசைய ரெகுநாத சசிவற்னப் பெரிய உ
24. டையாத் தேவரவர்கள் புத்திரன் முத்துவடுகனாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் தி
25. ருவாவடுதுறைப் பண்டாரச் சன்னிதியில் அம்பலாணசுவாமி பூசைக்கும் மகேசு
26. சர பூசைக்குந் தற்ம சாதனம் பட்டையங் கொடுத்தபடி பட்டையமாவது கிராமங் கொடி மங்
27. கலம் நாகமுகந்தன்குடிக்கு வடக்கு முடவேலிக்குந் தாய மங்கலத்துக் எல்லைக்குந்த தெற்கு வி

இரண்டாவது பக்கம்

28. ளாங்குடி எல்லைக்கு மேற்கு எம்மத்துக்கும் கிழக்கு இந்தப் பெருநாங் கெல்லைக்
29. குள்ப்பட்ட நிலம் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத்திடல் நிதி நிட்சேம் உள்படக் கிராமத்
30. தில் பளவரிப் பலவரி வேண்டுகோல்வரி வெள்ளைக்குடைவரி கொடிக்கால்வரி
31. கத்திப்பெட்டிவரி மற்றச் சில்லறைப் பலவரியளும் ஊளிய பாழியமுஞ் சறுவமானியமாக
32. ச் சந்திராதித்தருள்ளவரைக்கும் பரம்பரையாகக் கையாடிக் கொண்டு தற்மம் பரிபாலன
33. ம் பண்ணிக் கொண்டிருப்பார்களாகவும் இந்தத் தர்மத்தை யாதாமொருவர் பரிபாலனம்பண்
34. ணின பேர்கள் காசியிலேயுஞ் சேதுவிலேயும் சிவலிங்கப் பிறதிட்டையும் ஆயிரம் பிரமப்
35. பிறதிட்டையும் ஆயிரங் கன்னிகாதானம் கோதான புண்ணியமும் பெறுவாராகவும் இ
36. ந்தத் தற்மத்துக்கு அயிதம் பண்ணின பேர் இதற்கு யெதிர்மறைப் பயனையடைவாராகவும் உ
37. இதுவல்லாமலுமனேக குனூர் பாவப்பயனையுடையவராகவும்
38. உ ஆறுமுகம் சகாயம் உ ★
(★38-ம் வரி தெலுங்கில் எழுதப் பெற்றுள்ளது)