பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. விருபாட்சியில்
வேலுநாச்சியார்

திண்டுக்கல் கோட்டைக்கு வடகிழக்கே பதினெட்டுக் கல் தொலைவில் அமைந்து இருக்கிறது விருபாட்சி என்ற சிற்றுார். திண்டுக்கல் சீமையின் பிரதானமான இருபது பாளையங்களில் இந்த பாளையமும் ஒன்று. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஜயநகர பேரரசர்களாக இருந்த, 'விருபாட்ச' என்ற சிறப்பு பெற்ற மன்னர்களது நினைவாக எழுந்த ஊர். விஜய நகரப் பிரதிநிதியாக மகாமண்டலேசுவரராக, திருச்சிராப்பள்ளியில் ஆட்சி செய்த மல்லிகார்ஜுனர், மதுரைப் படையெடுப்பில் அவருக்குத் துணை புரிந்த தொட்டிய நாயக்கரைப் பெருமைப்படுத்த அவரால் தோற்று விக்கப்பட்டது என்றும், இன்னொரு செய்திப்படி விசுநாத நாயக்கரால் வழங்கப்பட்டது இந்தப் பாளையம் எனவும் மதுரை கெஜட்டிரில் வரையப்பட்டுள்ளது.[1] பி.எஸ். வார்டு என்பவரது "மதுரை திண்டுக்கல் நினைவுகள்" என்ற நூலில் இந்தப் பாளையம் சின்னப்ப நாயக்கர் என்ற கம்பளத்தாரரால் நிறுவப்பட்டது என்றும், இவர்தமது தீரச்செயல்களால் மதுரை நாயக்க மன்னருக்கு பல போர்களில் அரிய உதவி செய்த காரணத்தினால் 'திருமலை' என்ற விருது வழங்கப்பட்டது என்றும் வரைந்துள்ளார். அத்துடன் மதுரைக் கோட்டையின் எழுபத்து இரண்டு கொத்தளங்களில் திருமஞ்சன வாசல் என்ற கொத்தளத்தின் பாதுகாப்பு பொறுப்பு இந்த பாளையக்காரரிடம் இருந்தது எனத் தெரிய வருகிறது. இந்தப் பாளையம் மைசூர் மன்னரது மேலாண்மைக்கு உட்பட்ட பிறகு, அவரது பாளையத்தின் கப்பத்தினை உயர்த்திய ஹைதர் அலியின் ஆணையை எதிர்த்து தள்ளுபடி தொகையைப் பெற்றார்.[2] அப்பொழுது


  1. Francies Gazettcer of Madura [1909). P: 310
  2. Ward B.S. - Memoir of Madura and Dindigal (1895) Vol. 3. P: 68