பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

(கி.பி.1754) இருந்தவர் திருமலை கோதர சின்னப்ப நாயக்கர் என்ற தீரர். குடமுருட்டி ஆற்றின் கரையில் ஒரு சிறிய மண்கோட்டை வளமான விளைநிலங்கள்: தமிழக மறவர்களைப் போல குடிப் பெருமையும் மான உணர்வும் மிக்க கம்பளத்து நாயக்கர்களான குடி மக்களையும் அவர்களது தலைவரையும் கொண்டது. இந்த சிறிய ஊரை ராணிவேலு நாச்சியாரும், அவரது குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற பொருத்தமான ஊராக பிரதானி தாண்டவராய பிள்ளை தேர்வு செய்தார்.

காளையார் கோவில் போரைப் பற்றிக் கேள்வியுற்ற அந்த ஊர் பாளையக்காரர் மிகுந்த அனுதாபத்துடன் சிவகங்கை ராணிக்கும் பிரதானிக்கும் தக்க வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், திண்டுக்கல் கோட்டைத் தளபதியும், மைசூர் ஐதர் அலியின் மைத்துனருமான சையத் சாகிபுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மறவர் சீமைகளில் இருந்து ஆற்காட்டு நவாப்பை துரத்தியடிப்பதற்கு படை உதவி கோரிய ராணியாரின் வேண்டுதலையும், சுல்தான் ஐதர் அலிக்கு பரிந்துரையுடன் அனுப்பி வைக்குமாறும் செய்தார்.

சிவகங்கை பிரதானி தாண்டவராய பிள்ளை ராணிவேலு நாச்சியாருக்காக

சுல்தான் ஐதர்அலி பகதூர் அவர்களுக்கு 08.12.1772 தேதியிட்டு அனுப்பிய கடிதம்,[1]

".... ஆற்காட்டு நவாப், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரு :தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். :அங்கிருந்து தப்பி வந்த நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் :தங்கி கிளர்ச்சியை தொடர்ந்து வருகிறேன். இந்த முயற்சியில் :எனக்கு யார் உதவி செய்தாலும் இன்னும் சிறந்த சாதனைகளை :இயற்றமுடியும். ஆகையால், தாங்கள் ஐயாயிரம் குதிரை :வீரர்களையும். ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால் :அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் :இணைந்து இந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற :இயலும், அத்துடன் மதுரைக்கும் படைகளை அனுப்பி வைத்து :அந்த சீமை முழுவதும் எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கி :வைக்கவும் இயலும். அங்குள்ள பாளையக்காரர்களும் நமக்கு :ஒத்துழைப்பு நல்குவார்கள்.
தங்களுக்கு செலுத்த வேண்டிய நஜர் பற்றி பின்னர் முடிவு :எடுத்துக் கொள்ளலாம்.
- தாண்டவராயப்பிள்ளை,
சிவகங்கை சமஸ்தான பிரதானி.

  1. Millitary Country Correspondence Vol. 21. P: 281-282