பக்கம்:சீவகன் கதை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை


  100           சீவகன் கதை

தாம் தனிமையில் இருந்த காலத்து நடந்த நிகழ்ச்சி களையும் உற்றார் உறவினர்தம் நலங்களையும் மகிழ்ந்து பேசிக்கொண்டேயிருந்தனர். நந்தட்டன் சீவகன் பிரிந்த பின் நண்பர்தம் செயலையும் குணமாலை தத்தையரின் தளர்வையும் கூறினான். சீவகனோ, இயக்கனால் தான் தப்பியது முதல் அன்று வரை நடந்த அனைத் தையும் ஒன்று விடாமல் தம்பிக்கு உணர்த்தினான். அத்தனை நிகழ்ச்சிகளையும் கூறி, இறுதியாகத் தம்பியை அங்குக்கண்டு அகமகிழ்ந்த நிலையைப்போற்றிப்பேசினான் சீவகன். இந்த இடத்தில் தேவர் உளங்கனிந்து உடன் பிறந்தார் நேயத்தைப் பற்றிப் பேசுகின்றார். கம்பர் தம் கற்புக்குச் சிந்தாமணி ஊற்றாயவாறு போன்றே இனிமை யான உடன் பிறப்பு உயர்வுக்கும் இதுவே ஊற்றாயிற் றென்பதை உணர்வார் அறிவர். ஒரு பாட்டுக் காட்டி மேலே செல்லலாம்:

          “திண்பொருள் எய்த லாகும்; தெவ்வரைச் செகுக்க லாகும்; 
           நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ண லாகும்; 
           ஒண்பொரு ளாவ தையா! உடன்பிறப் பாக்க லாகா; 
           எம்பியை யீங்குப் பெற்றேன் என்எனக் கரிய தென்றான்.' 
                                                    (1760)
என்ற பாட்டுப் படித்து இன்புறத் தக்கதன்றோ இந்த

ணைந்த உடன் பிறப்பாளர் இருவரும் இங்கு ஏமமா புரத்தே இருக்க, இனி அங்கு இராசமாபுரத்தே உள்ள மற்றவர் தம் செயலும் நினைக்க வேண்டுவதாகும். தேனைப் பாலெனச் செய்பவன் தம்பியோடு இங்கிருக்க, அங்குப் பிறர் செய்த செயலை இனிக் காண்பாம் : தோழ்ர் செயல் : அ.

                     V
              உண்மை வெளிப்படுதல்

வகனும் தம்பி நந்தட்டனும் இங்குக் கேமமா ருத்தே ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவி நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/101&oldid=1483956" இலிருந்து மீள்விக்கப்பட்டது