பக்கம்:சீவகன் கதை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை வெளிப்படுதல்

                                      அப்பொழுது, அங்கு இராசமாபுரத்தே அவர் தம் தோழர் செய்வதறியாராய்ச் சிந்தை தளர்வாராயினர். பல நாட்க ளாகச் சீவகனைப் பிரிந்த வருத்தம் அவர்களை வாட்டி வந் துள்ளது. சென்ற இடம் அறியாது சீவகனை நினைத்து அவர்கள் வருந்தும் காலத்து நந்தட்டனும் மறையவே, அவர்கள் வருத்தம் மிக்கது. அவர்கள் சீவகனைத் தேட முடியாதவர்களாய், விஞ்சை மகளாகிய காந்தருவதத் தையை அடுத்து, நடந்தது பற்றி வினாவினார்கள். அவ் வித்தியாதர மகளும், சீவகன் ஏமமாபுரத்திலே கனக

மாலையோடு களிப்புற்றிருத்தலையும், நந்தட்டன் அவனைச் சென்று சேர்ந்ததையும் எடுத்துரைத்தாள். இருவரும் இருக்கின்றார் எனக்கேட்ட தோழர் மிகவும் மகிழ்ந்தனர்; பின்னர் அந்தப் புது நகருக்குச் செல்லும் வழி முதலிய வற்றைக் கேட்டறிந்தனர்; பின்பு தாம் செல்லப் போவ தைக்கூறி, 'சீவகனுக்குச் சேதி உண்டோ?' என, தத்தை யும் ஓலையில் ஓவியத்தால் கடிதம் எழுதி, முத்திரை யிட்டுத் தந்தனள். பெற்ற தோழர் நால்வரும் குதிரை யேறிப் புறப்பட்டனர். அவர்கள் புறப்பட்ட போது என்றும் அவர்களைப் பிரிந்தறியாது நின்ற பெருஞ் சேனையும் உடன் புறப்பட்டது. பல்வேறு வாத்தியங்கள் முழங்கத் தோழர் நால்வரும் அவ்விராசமாபுரத்திலிருந்து புறப்பட்டனர். காட்டு வழியிலே: புறப்பட்ட தோழர் நெடுந்தொலைவு சென்றனர்; நாட்டு வழியையெல்லாம் க கடந்து, காட்டு வழியினுள் புகுந்தனர்; காட்டில் இயற்கை வழங்கும் அழகுகளை யெல்லாம் கண்டுகொண்டே முனிவர் பலர் தங்கியுள்ள ஒரு மலர்ச்சோலையை அடைந்தனர். அச்சோலையில் பல்வேறு துறவிகளோடும் தாபதர்களோடும் சீவகன் தாயாகிய விசையை தங்கியிருந்தனள். அரச இழந்து, அருமை மைந்தனை இழந்து, 7 3 1 DEC 1992 போகத்தை வையும் ARY

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/102&oldid=1484564" இலிருந்து மீள்விக்கப்பட்டது