பக்கம்:சீவகன் கதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வளத்தையும் இழந்து, வாடிய முகத்தோடும், அருகதேவ னைப் போற்றும் வாக்கோடும், சடை முடியோடும் விசையை காட்சி அளித்தாள். அவள் உள்ளமெல்லாம் சீவகன் வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு நின்றது. தோழர்கள் சென்ற போதும் அவள் மனம் அந்தச் சீவக னையே சிந்தித்திருந்தது. சென்ற தோழர் அவளடி பணிந் தனர்.

பணிந்து எழுந்த மைந்தர், அவளது குலமும் இட மும் யாவையென்று வினாவினர். விசையையோ, அவ் வேடத்தோடு அவற்றைக் கூறுவது தக்கதன்றெனக் கூறி, அவர்களைப் பற்றி வினவினாள். அவர்களும் தாங் கள் இன்னாரென்றும் தங்கள் வரலாறு இன்னதென்றும் கூறிக்கொண்டு வந்தார்கள்; தங்கள் நகர் இராசமாபுர மென்றும், தம்முள் ஒருவன் மந்திரி சாகரன் மகன் சீதத்தன் என்றும், மற்றவன் சச்சந்தனின் அந்தண னாகிய அசுவகன் மகன் புத்திசேனன் என்றும், மூன்றா மவன் செட்டியாகிய தனபாலன் மகன் பதுமுகனென் றும், நாலாமவன் விசயதத்தன் மகனாகிய தேவதத்தன் என்றும் கூ உறினர்; பின்னர்த் தம் தலைவன் சீவகனைப் பற்றியும் கூறினர்; சீவகன் தத்தையையும் குணமாலை யையும் மணந்ததைக் கூறினர். பின்பு கட்டியங்காரன் சீவகனைக் கொல்ல நினைத்த கொடுமையைக் கூற வந்த வர் 'சீவகனைக் கொல்ல' என்று கூறியதைக் கேட்ட விசையை மூர்ச்சையாயினள்.

விசையை அறிந்தாள்:

அது கண்ட மைந்தர்,‘நம் சீவகனுக்கு உற்ற இடரைக் கூறினால், இவர் ஏன் மயங்கி விழ வேண்டும்!' என்று எண்ணினராய் நின்றனர்; பின்பு அவள் வருத்தந் தீர்த்தற்குரிய வழி நாடி மயக்கம் தெளிவித்தனர். தெளிந்த விசையை சீவகனை நினைத்துப் புலம்பத் தொடங்கினள். சீவகன் இறந்தான் என்றே முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/103&oldid=1484385" இலிருந்து மீள்விக்கப்பட்டது