பக்கம்:சீவகன் கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 சீவகன் கதை

*நோக்கவே தளிர்த்து நோக்காது       
   இமைப்பினும் நுணுகும் நல்லார்.           
 பூக்கமழ் அமளிச் சேக்கும்
   புதுமண வாள னார்தாம்
 நீப்பிலார் நெஞ்சி னுள்ளார்
   ஆதலால் நினைத்தல் செய்யேன்;.        
 போக்குவல் பொழுதும்; தாந்தம்
   பொன்னடி போற்றி!' என்றாள்.'
                                         (1880)

என்ற செய்யுள் காமத்துப்பால் குறள் அடிகள் பல வற்றை உள்ளத்துக் குவிக்கின்றது. இக்கடிதங் கண்ட சீவகன், விரைவில் தத்தையையும் குணமா மாலையையும் காண நினைத்தான். பின்பு அவன் தனது பிறவியின் உண்மையை அவர். கள் எவ்வாறு அறிந்தார்கள் என்று தோழரைக் கேட் டான். அவர்களும் வழியிடை அரசமாதேவியைக் கண்ட தையும் பிறவற்றையும் கூறினார்கள். கேட்ட சீவகன், 'என்னை ஈன்ற அடிகளும் உளரோ!' என்று நைந்து, அவள் இருந்த திசை நோக்கி வணங்கினான்; பின்பு உடனே புறப்பட ஏற்பாடு செய்தான். அந்நாட்டு அரச னும் சீவகன் பிறப்பினைக் கேட்டு மகிழ்ந்தான். சீவகனும் தன் மனைவி கனகமாலையிடத்தும் மைத்துனரிடத்தும் விடை பெற்றுக்கொண்டு, அரசனையும் பணிந்து, தோழர் சூழத் தன் நாடு நோக்கிப் புறப்பட்டான். அப்போது து நன்னிமித்தங்கள் நிகழ்ந்தன. தாயும் சேயும்:

நாட்டையும் காட்டையும் கடந்து நம்பியாகிய சீவக னும், தம்பியும், தோழரும், அவர்தம் சேனை வீரரும் சென்றுகொண்டேயிருந்தனர். வழியிடை நந்தட்டன்

பதுமுகற்குப் பல வகையில் நல்லுரைகள் பகர்ந்து கொண்டே வந்தான். அனைவரும் அரசமாதேவி விசையை தங்கியிருந்த சோலை அருகில் வந்தனர். விடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/107&oldid=1484584" இலிருந்து மீள்விக்கப்பட்டது