பக்கம்:சீவகன் கதை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மை வெளிப்படுதல் 107


யற்காலை மகனைக் கண்டதாகத் தான் கண்ட கனவினை எண்ணி மகிழ்ந்த விசையை முன் சென்று, பதுமுகன் 'நம்பி வந்தான்,' என்று கூறினான். உடன் வந்த சிவகனும், 'அடிகளே!' என்று தாழுது அவள் பாதங்களைப் பற்றிக்கொண்டான். அவனைக் கண்ட விசையை, கண்கள் நீரையும் தனங்கள் பாலையும் பொழிய, அவற்றால் நனைந்த சீவகனை வாரி எடுத்துத் தழுவிக்கொண்டாள் ; சீவ கனைக் குழந்தைபோலத் தழுவித் தான் அவனை விட்டு நீங்கிய கொடுமையை நினைந்தாள்; தன்னைக் காண வந்த சீவகன் பெருமையைப் பேசினாள். தேவர் அப்பேச்சினை; யற்காலை மகனைக் கண்டதாகத் தான் கண்ட கனவினை எண்ணி மகிழ்ந்த விசையை முன் சென்று, பதுமுகன் 'நம்பி வந்தான்,' என்று கூறினான். உடன் வந்த சிவகனும், 'அடிகளே!' என்று தாழுது அவள் பாதங்களைப் பற்றிக்கொண்டான். அவனைக் கண்ட விசையை, கண்கள் நீரையும் தனங்கள் பாலையும் பொழிய, அவற்றால் நனைந்த சீவகனை வாரி எடுத்துத் தழுவிக்கொண்டாள் ; சீவகனைக் குழந்தைபோலத் தழுவித் தான் அவனை விட்டு நீங்கிய கொடுமையை நினைந்தாள்; தன்னைக் காண வந்த சீவகன் பெருமையைப் பேசினாள். தேவர் அப்பேச்சினை; 6 "வாள்திறல் குரிசில் தன்னை வாளம ரகத்துள் நீத்துக் காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர் சேட்டிளம் பருதி மார்பிற் சீவக சாமி யீரே ! ஊட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ' என்றாள்.'(1913) என்று எடுத்துக் காட்டுகின்றார். பின்பு இருவரும் உளங்கலந்து பேசினர். சீவகனை வளர்த்த சுனந்தையையும் கந்துக்கடனையும் விசையை போற்றினள். சீவகன் அவ்வாறு தன் தாயோடு அத் தாபதப் பள்ளியில் ஆறு நாள் தங்கியிருந்தான். பின்பு விசையை சீவகனை அழைத்து, அரசர்களுக்கு அமைய வேண்டிய பெருஞ்சிறப்புக்களையும் அரும்பண்புகளையும் கூறி, அத்தகைய அரசர் குலத்தில் பிறந்து பின்பு அனைத்தையும் இழந்த சீவகன் இனி செய்யப்போவது என்ன என்று கேட்டாள். அவனோ, தனக்கு நிகராகப் போர் செய்யக் கட்டியங்காரன் வல்லன் அல்லனென்றும், கட்டியங்காரன் என்னும் பாம்பை நந்தட்டன் என்னும் கருடனே எளிதில் மாய்க்கும் என்றும் கூறி, விரைவில் நாட்டை மீட்கப்போவதையும் குறித்தான். பின்னர் அவள் அவன் வார்த்தையில் பெருமிதம் கொண்டாளாகி அரசன் ஆராய வேண்டிய காலம் இடம் முதலியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/108&oldid=1483975" இலிருந்து மீள்விக்கப்பட்டது