பக்கம்:சீவகன் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

10 சீவகன் கதை வழி வழி இருந்து ஆட்சி செய்த நாடு ஏமாங்கத நாடா கும். அந்நாட்டு வயல் வளமே தேவரால் மிகச் சிறப்பாக டுத்துப் பேசப்படுகிறது. எ நாட்டில் மழை பெய்கிறது. காலம் தவறாத பெயல் அது. மக்கள் தங்கள் பயிர் வளனைப் பெருக்கக் கால் கோள் விழாத் தொடங்கும் நாட்களில் பெய்யும் பெரு மழை என்றால், அம்மழை நோக்காத மக்கள் இருப்பார் களோ! மேகம் திரண்டது ; மலைமுகட்டைத் தொட்டது; வானம் கறுத்தது; நீர்ப்பொறை நிறைந்தது. அந்தக் காட்சி தேவருக்கு உயரிய கிளையில் ஈக்கள் கட்டிய தேன் கூட்டை நினைவுறுத்திற்று. கனத்த மேகம் மழைத் தாரைகளை மண்ணின்மேல் வீசத்தொடங்கிற்று. அத் தாரைகள் வெள்ளிக் கோல்களென விளங்கின. அந்த நிலையில் மழை பொழிய ஆரம்பித்தது என்று அழகுபட மழையோடு தம் காவியத்தைத் தொடங்குகிறார் தேவர். C தேன்நி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின் மேல்நி ரைத்து விசும்புற வெள்ளிவெண் கோல்நி ரைத்தன போற்கொழுந் தாரைகள் வான்நி ரைத்து மணந்து சொரிந்தவே.' (33) விசும்பின் துளி வீழின் வயல் உழவர் உட்கார எருதுகளோடு வயல் என்பது தேவர் வாய்ச்சொல். மண்ணிற் பசும்புல் தலை நிமிரும். ஓய்வு இன்றித் தத்தம் உரிமை வெளிகளுக்குச் செல்கின்றனர். அவர்களை நோக்கி மலை யிடைப்பெய்த மழை, கடலெனத் திரண்டு வருகின்றது. அக்காட்சி, வள்ளல் தன்மை உடையவர் தாம் மலை போன்ற உயர்வாழ்வில் கொண்ட பெருஞ்செல்வத்தினைக் கீழ் அல்லலுற்று வருந்துவாருக்கு வாரிக்கொடுக்கும் தன்மை போல அமைந்துள்ளதாம். மழை பெய்தது. வெள்ளம் வந்தது. வயல் உ உழவு வளம் பெருக்கத் தொடங்கினர். உழவுத் தொழில் மேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/11&oldid=1484469" இலிருந்து மீள்விக்கப்பட்டது