பக்கம்:சீவகன் கதை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 உண்மை வெளிப்படுதல் 109

விமலை என்னும் பெண்ணே அவ்வாறு பந்தாடியபாவை. அவள் ஆடிய பந்து சற்றே வேகமாகச் சென்றுதெருவிடை வீழ்ந்தது. அதே வேளையில் சீவகன் அத்தெரு வழியே சென்றுகொண்டிருந்தான். அப்பந்து அவன் பக்கத்தே சென்று விழ்ந்தது. தன் பந்தைத் தெட வந்த விமலை, அஃது ஓர் ஆடவன் பக்கத்தில் விழுந்திருப்பதைக் கண்டாள்; அவனை நிமிர்ந்து நோக் கினாள்; அவன் அழகில் மயங்கினாள். அவள் நினைப் பைத் தேவர்,

     பெண்பா லவர்கட் கணியாய்ப்பிரி யாத நாணும் 
       திண்பால் நிறையும் திருமாமையும் சேர்ந்த சாயல்
       கண்பாற் கவினும் வளையும்கவர்ந் திட்ட கள்வன் 
       மண்பா லிழிந்த மலரைங்கணை மைந்தன்,' என்றாள்.' (1961)

எனக் காட்டுகின்றார்.இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கினர். ஒருவருக்கு மற்றவர் அடிமையாயினர். உள்ளங்கள் ஒன்றுபட்டன. தன் நாணழிந்து வாடும் தையலைப்பற்றிச் சீவகன் முன்னமே அறிந்திருக்க வேண்டும்; அன்றிப் பின்னேயாவது கேட்டறிந்திருக்க வேண்டும். எப்படியோ, அவள் தந்தையை அறிந்து அவனது கடையிலே சென்று உட்கார்ந்தான் சீவகன், விமலையின் மணம் : புதியவன் வந்து உட்கார்ந்தசிலநாழிகைக்கெல்லாம் அக்கடையிலிருந்த எல்லாப் பண்டங்களும் விரைந்து விலை போயின. கண்ட விமலையின் தந்தை யாகிய அக்கடைக்குரியவன் மகிழ்ந்தான்; பல நாட்க ளாக விலையாகாதிருந்த பண்டங்களைப் பற்றித் தான் வருந்திய ஒருகால், ஒரு புதியவன் ஒரு நாள் அக்கடை யில் வந்து உட்காருவானென்றும், அப்போதே எல்லாப் பண்டங்களும் விலையாகிவிடுமென்றும், அவ்வாறு வரும் புதியவனே அவன் மகள் விமலையின் கணவனாவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/110&oldid=1484587" இலிருந்து மீள்விக்கப்பட்டது