பக்கம்:சீவகன் கதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

112 சீவகன் கதை

கிறார். பெண்டிர் பலர் தனக்கு மனைவியராய் இருக்கவும், ஒருவனிடம் சபதம் செய்த காரணத்தால் மற்றொரு பெண்ணையும் மணக்கச் செல்லும் அவன் நிலை கண்டு, அவன் பேயானான் என்று குறிக்கின்றார் தேவர்.

'வெண்ணரை உடம்பினன் விதிர்த்த புள்ளியன்
நுண்ணவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன்
கண்ணவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன்
பெண்நலம் காதலிற் பேயும் ஆயினுன்.'

(2010)

என்கின்றார் அவர்.

ேதாண்டு கிழவனாகிய சீவகன் நேரே போய்ச் சுரமஞ்சரியின் வாயிலில் நின் ன். சுரமஞ்சரியின் தாழிகள் அக்கிழவனின் மூப்பு நிலையையும், அவன் உயிர்போகும் நிலையில் வாடி நிற்பதையும் கண்டு, தங்கள் தலைவிக்கு அவன் நிலைபற்றிக் கூறச் சென்றார்கள்; சென்று வாயிலில் வயது முதிர்ந்த பார்ப்பனன் வந்துள்ளான் என்பதைக் கூறினார்கள். அவளும் முதிர்ந்தவனைப் பார்ப்பதில் விரதம் கெடுவதன்று எனக் கருதிக் கூறி, அவர்களோடு விரைந்து வந்து, கிழவனைக் கண்டாள்; வந்தவள் கிழவனை நோக்கி, 'இங்கு வந்த காரணம் என்ன?' என்றாள். அவனோ, இரு பொருள்படக் 'குமரியாட வந்தனன்,' என்றான். ‘அ த னால் பயன் என்று சுரமஞ்சரி கேட்க, 'மூப்பு அகலும்,' என் று விடையி றுத்தான். இவற்றைக் கேட்ட சுரமஞ்சரி அவன் கிழவனாய் இருப்பதோடு பயித்தியக்காரனாயும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்; அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

செத்த மரம் பெருமழையாற் பிழைக்கும் வகையில், ‘மூப்புக் குமரியாடப் போம்' என்று கூறியதை எண்ணி வியந்த சுரமஞ்சரி, அக்கிழவன்மேல் இரக்கங்கொண்டு, அவன் பசியைத் தீர்க்க விழைந்தாள்; பக்கத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/113&oldid=1484035" இலிருந்து மீள்விக்கப்பட்டது