பக்கம்:சீவகன் கதை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை114

'வல்லதெனை யென்னமறை வல்லன்மட வாய்யான்
எல்லைஎவன் என்னப்பொருள் எய்திமுடி காறும்
சொல்லுமினு நீவிர்கற்ற காலமெனத் தேன்சோர்
சில்லென்கிளிக் கிளவி!அது சிந்தையிலன் என்றான்.'

(2027)

என்பது அவர் வாக்கு. பின்னர்த் தான் சோர்வுற்றதாகக் கிழவன் காட்ட, அவனுக்குத் தனது பட்டிட்ட கட்டிலையே இடமாகக் கொடுத்து அதிலே படுத்து உறங்கச் சொன்னாள் சுரமஞ் சரி. பின்னர் மாலைக் காலம் வந்தது. மாலை இரவாக மாறிற்று.

இரவில் அனைவரும் உணவுண்டு உறங்குமுன் தாம் தாம் கற்ற கலை நலன்களை ஓம்புவாராயினர். சிலர் இன் னிசை வீணையராயினர். சிலர் யாழ் வாசித்தனர். சிலர் பாட்டிசைத்தனர். சிலர் நடனமாடினர். இவ்வாறு கன்னி மாடத்திலே இருந்த பெண்டிரெல்லாரும் தம் கலை நலம் பேணும் காலத்துப் பட்டு மெத்தையில் படுத் திருந்த கிழவனாகிய சீவகனும் தன் செயல் நிறைவேறக் காலம் பார்த்திருந்தான். உடனே அவன் வாய் விட்டு இனியதொரு கீதத்தைப் பாடத் தொடங்கினான். அவ னது பாடல் சை கேட்ட மகளிர் அனைவரும் வாயடங் கினர்; அது வரை தாம் அது போன்ற இனிய கானத் தைக் கேட்டதில்லை என்றனர். அறிந்த சிலர், அது சீவகன் பாடலை ஒத்தது என்றனர். அவன் பாடலைக் கேட்கப் பலவிடங்களிலும் பரந்திருந்த அக்கன்னி மாடத்துத் தையலர் அனைவரும் மான் கூட்டங்கள் சென்று சேர்வதை ஒத்து அக்கிழவன் இருந்த இடத் தைச் சென்று சேர்ந்தனர்.

மற்றவர்களெல்லாம் மயங்கிய அதே நிலையில் சுரமஞ் சரியும் தன் வசம் இழந்தாள்; இழந்து அவனைக் காண ஓடி வந்தாள். சீவகனோ, 'கிழவனைக் காண வருவது ஏன்?’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/115&oldid=1484064" இலிருந்து மீள்விக்கப்பட்டது