பக்கம்:சீவகன் கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சீவகன் கதை

பணித்து, காம தேவன் முன் சென்றாள்; சென்று வழி பட்டு, போற்றி, தனக்குச் சீவகனைத் தரவேண்டும் என்று தாழ்ந்து வேண்டிக்கொண்டாள்; தான் எண்ணிய முடிந்து சீவகனோடு சேர்ந்தால் அக்காமதேவனுக்குச் சிறப்புச் செய்வதாகவும் கூறினாள்.


தாமரைச் செங்கண் செவ்வாய்த் தமனியக் குழையி னுய்!ஓர்
காமமிங் குடையேன்: காளைச் சீவகன் அகலம் சேர்த்தின்
மாமணி மகரம் அம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர்
பூமலி மார்ப! ஈவல் ஊரொடும் பொலிய,' என்றாள்.'

(2057)

என்று அவள் வேண்டுகோளை அப்படியே தேவர் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

முன்னர்ச் சீவகன் சொன்னபடியே அவன் நண்ப னாகிய புத்திசேனன் காமன் சிலையின் பின்னே மறைந் திருந்தான். அவன் சுரமஞ்சரியின் வேண்டுகோளைக் கேட்டதும், 'சீவகனைப் பெற்றாய்; விரைந்து செல்,' என், கூறினான். அவ்வாறு கூறியவன் காம தேவனே என்று கருத்துட்கொண்ட சுரமஞ்சரி, மறு முறையும் அவனை வா வாழ்த்தி, கிழவனை விட்ட அறைக்கு விரைரைந்து வந்தாள். வந்தவள், கிழவனைக் காணவில்லை; சீவகனையே கண் டாள். அவள் நலங்கனிந்து உ அவன் முன்னே நின்றாள். அவள் நிலைமையை அழகுபடச் சில பாடல் களால் விளக்குகிறார் தேவர். திர் பாராத நிலையிலே தாம் பல நாள் விரும்பித் தவம் கிடந்த பொருள் கிடைத் தால், யார் தாம் வியவார்! அதினும், விரும்பிய காலனே கிடைப்பின், வினவலும் வேண்டுமோ!

சீவகன் அவளைச் சேர்த்துத் தழுவினான்; அவள் அழகையெல்லாம் வியந்து வியந்து பாராட்டினான்; பின்பு மறு நாள் வந்து அவளை மணப்பதாக வாக்களித்துச் 'சென்று வருக!” என்று அனுப்பினான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/117&oldid=1484093" இலிருந்து மீள்விக்கப்பட்டது