பக்கம்:சீவகன் கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வழியின் நிலத்தியல்புகளை எல்லாம் விளக்கிக் கூறுகின்றார் தேவர். சீவகன் நால்வகை நிலங்கடந்து விதய நாட்டுத் தலைநகர் எல்லை சார்ந்து, தான் வந்திருப்பதை மாமனுக்குச் சொல்லியனுப்பினான். மாமனாகிய கோவிந்தனும் அவனை வரவேற்கும் முறையில் நன்கு எ திரேற்று உபசரித்தான். அந்நகர்த் தெரு வழியே சீவகன் செல்லுங்காலத்து அவன் தோற்றங்கண்டு கருத்தழிந்த மகளிர் நிலையைச் சில பாடல்களால் பாராட்டு கின்றார் தேவர்.மகளிர் மட்டுமன்றி, மற்றவரும் சீவகனைக் கண்டு போற்றி ஏற்று மகிழ்ந்தனர். அனைவ ரும் மகிழ்ந்து எதிர்கொள்ளச் சீவகன் தன் மாமனது மாளிகை சென்று சேர்ந்தான். அம்மாளிகையிலுள்ள மகளிரும் மைந்தரும் சீவகனை எதிர்கொண்டனர்.

அனைவரும் போற்றி வணங்கி நிற்க மாளிகையுள் புகுந்த சீவகன், நேரே சென்று தன் மாமன் அடிகளில் வீ வீழ்ந்து வணங்கினான். பாவம்! சுற்றம் அறியாது சோர்ந்து வாடிய அவன் உள்ளத்தே தன் மாமனைக் கண்டதால் பெருமகிழ்வு சிறந்து நின்றது போலும்! கோவிந்தராசனும் தன் மருமகன் என்பதறிந்து சீவகனை எடுத்து மார்புறப் புல்லி மகிழ்ந்தான். அவனது இன்பக் கண்ணீர் சீவகனது உடலை நனைத்தது. அரசன் கண்ணீர் கண்டு அனைவரும் அவலமுற, அருகிருந்த விசையை அவர்கள் கண்ணீரை மாற்றினாள். ஆம்; பிரிந்தவர் கூடினால் பேச்சேது! உள்ளந்திறந்து கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வருமல்லவா? 'அன்பிற்கும் உண்டோ அடை டக்கும் தாழ்!' அனைவரையும் கண்டு அளவளாவிய சீவகன், தன் மாமனோடு புறப்பட்டு, அமைச்சர் சூழ அத்தாணி மண்டபம் சேர்ந்தான்; சேர்ந்து, மேல் செய்ய வேண்டுவனவற்றை ஆராய்ந்தான்.

இரும்பை இரும்பால் போழ்ப:

வயது முதிர்ந்த கோவிந்தராசன் அடுத்துத் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/120&oldid=1484131" இலிருந்து மீள்விக்கப்பட்டது