பக்கம்:சீவகன் கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பலபடப் பாராட்டுகின்றார் தேவர். தேரும், யானையும், குதிரையும், ஆளும் அணி அணியாகப் புறப்பட்ட காட்சி தேவர் உள்ளத்தைத் தொட்டிருக்கின்றது. தொடாமல் எப்படி இருக்க முடியும்? சீவகன் தன் சேனையோடு பகைவனை வென்று - அறத்தாற்றான் மறம் கொன்று- உலகில் உண்மையை நிலை நாட்டப் புறப்பட்ட போரன்றோ அது! அதை எண்ணித் தேவர் உள்ளம் துள்ளிற்று. வெள்ளம்போலப் பல பாடல்கள் வெளியாயின. சேனை செல்லும் அதே வேளையில் சீவகனுக்குப் பல நன்னிமித் தங்கள் நிகழ்ந்தன.

'சிறுவெண் சங்கு முரன்றன; திண்முரசு
அறையு மாக்கடல் காரென ஆர்த்தன;
 நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும்;
இறைவன் கண்வலன் ஆடிற் றியைந்தரோ.'(2168)

என்று தேவர் நன்னிமித்தங்களைக் குறிக்கின்றார்.ஆம். அவ்வாறு புறப்பட்ட சேனையானது, இராசமாபுரத்து வெளி எல்லையில் வந்து தங்கியது. அதே வேளையில் அரசமாளிகையிலிருந்த கட்டியங்காரனுக்குப் பல துன் னிமித்தங்கள் நிகழ்ந்தன.

திரிபன்றி எய்தல்:

பாவம்! வாயிலிலே வந்திருக்கும் கூற்றுவனை அறி யாத கட்டியங்காரன், கோவிந்தராசன் தன் வலையில் அகப்பட்டதால் அவனையும் கொன்றுவிடலாம் என்று கருதி, அவனை அழைக்க யானையும் தேரும் அனுப்பினான். ஆனால், அதே வேளையில் அங்குக் கோவிந்தராசன் கட்டி யங்காரனைக் கொல்லச் சூழ்ச்சியை மேற்கொண்டிருந் தான். அவன் செய்தது இதுதான்:

'பெருமகன் காதற் பாவைப் பித்திகைபபிணையல் மாலை
ஒருமகள் நோக்கி னுரை உயிரொடும் போகொ டாத
 திருமகள்; அவட்குப் பாலான் அருந்திரி பன்றி யெய்த
அருமகன் ஆகும் என்றாங்கு அணிமுரசு அறைவித் தானே.'(2177)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/123&oldid=1484643" இலிருந்து மீள்விக்கப்பட்டது