பக்கம்:சீவகன் கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



        அறம் வென்றது.
   சீவகனும் அதற்கெனக் காலம் பார்த்திருந்தானாத  லின், தன் பக்கல் நின்ற மன்னரையும் தோழரையும் மற்ற வரையும் அவர் தம் சேனைகளையும் சேர்த்துப் போர் எதிர் நின்றான். எல்லாம் முன்னேற்பாட்டின்படி விரைந்து நடை பெற்றன. இருவர்தம் போரினையும் பலபடப் பாராட்டுகின்றார் தேவர். கட்டியங்காரன் முன் வஞ்சனை யால் நாடு கவர்ந்தான். அவன் கொடும்போர் முறை யினை எங்கும் விளம்பவில்லை தேவர்; அதே போலச் சீவகன து போர் விரிவாக இது முறையையும் எங்கும் கூறவில்லை; எனவே, இந்த இடத்தில் இரு வரும் செய்யும் போரைப் பல பாடல்களால் விளக்குகிறார்.


  நடைபெற்ற போரில் மடிந்த மன்னர் பலர். சேனை கள் சிதைந்தன. யானைகள் அறுபட்டுச் சாய்ந்தன. போர்க்களத்தைப் பரணி பாடுவது போலப் பாடுகின்றார் தேவர். ஆளும் ஆளும் மலைய, தேரும் தேரும் சாட, யானையும் யானையும் பொருத, குதிரையும் குதிரையும் கூடப் போர் செய்த காட்சி தேவரைப் பரணி பாடும் புலவராக்கிவிட்டது. காதற்கதைதான் என் று கருதிய நமக்குச் 'சிந்தாமணி பரணியோ!' என்னுமாறு போர் வரலாற்றை இங்கே விளக்குகின்றது.
    போர்க்களத்தே நந்தட்டன், பதுமுகன், புத்தி சேனன் முதலிய நண்பர்கள் தங்கள் ஆற்றல் தோன்றப் போர் புரிந்தார்கள். பிற நாட்டு மன்னர்களும் தங்கள் வலிமை காட்டி அருஞ்சமர் விளைத்தார்கள். இடையில் விபுலனது வீரத்தைக் காட்ட விழைந்த தேவர், தனக்கு ஒப்பார் இல்லாத போர்க்களத்தே அவனது வீரநெறியின் திறத்தை விளக்கிப் பாடுகிறார்:
    'வீறின்மையின் விலங்காமென
        மதவேழமும் எறியான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/126&oldid=1484088" இலிருந்து மீள்விக்கப்பட்டது