பக்கம்:சீவகன் கதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை

________________

128

அமைந்த செல்வ மண்டபத்தைச் சீவகன் சார்ந்தான். உரிய வேளையில் மன்னவனுக்குரிய மணி முடியைச் சூட் டப் பெற்றான் சீவகன்; அதன் பயனாக நாட்டில் இருந்த குறைகளையெல்லாம் போக்கினான். கட்டியங்காரன்கீ கீழ்க் கவன்ற குடிகள் நிறைவெய்தி மகிழ்ந்தார்கள். தன் தம்பி மாரை விளித்துச் சீவகன் நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்லவற்றையெல்லாம் உடனே செய்யச் சொன்னான். அவன் ஆண்ட சிறப்பையும் மேல் அவனைப் பற்றிப் பேச இருக்கும் ஏற்றத்தையும் தொகுத்துப் பூமகள் இலம் பகத்து இறுதியாகத் தேவர் பாடும் பாடல் சிறந்தது. அது இதுதான்: • 'திருமகன் அருளப் பெற்றுத் திருநிலத்து உறையும் மாந்தர் ஒருவனுக்கு ஒருத்தி போல உளமகிழ்ந் தொளியின் வைகிப் பருவரு பகையும் நோயும் பசியும்கெட் டொழிய இப்பால் பெருவிறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேச லுற்றேன்.' (2377)

என்று மேலும் சீவகன் சரிதத்தைத் தொடர்ந்து பாடு கின்றார். ஆட்சியேற்ற சீவகன் வரலாற்றை நாமும் பின் தொடர்ந்து காண்போம்:

என்

பிரிந்தவர் கூடினர்: அரசைத் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட சீவகன், மேல் நடைபெற வேண்டுவனவற்றை விரைந்து செய்வா னானான்; சென்றவிடமெல்லாம் சிந்தை பறிகொடுத்துக் காதலால் மணந்த மங்கையர் அனைவரையும் தக்க தூது வரை அனுப்பித் தன்னிடம் வரவழைத்துக்கொண்டான். அம்மகளிர் யாவரும், சீவகனைப் பிரிந்த வருத்தம் நீங்கப் பெற்றவராய், இராசமாபுரத்து வந்து, தம் காதலன் அடி வணங்கி, அவனை மார்புறத் தழுவி மகிழ்ந்தனர். ஏழு மனைவியரையும் ஒரு சேர இருத்தி, சீவகன் அவர்களுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து, அவர் களோடு மகிழ்ந்து இன்புற்றிருந்தான். அவன் தாயாகிய விசையையும், மைந்தன் சீவகன் ஏமாங்கத நாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/129&oldid=1484529" இலிருந்து மீள்விக்கப்பட்டது