பக்கம்:சீவகன் கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<b

 130 சீவகன் கதை

            பின்பு மணநிகழ்ச்சியைக் காட்டுகின்றார் தேவர். 
        மணமகளாகிய இலக்கணைக்குத் தோழிமார் தைலமாட்டிப் 
        பின்பு நீராட்டி அழகு செய்து அணிகளும் ஆடைகளும் 
        அணிவித்த சிறப்பு அறிந்து மகிழற்பாலது. ஒவ்வோர் 
        அணியின் சிறப்பையும் அது பொருந்திய அங்கச் 
        சிறப்பையும் எடுத்து விளக்கிக் காட்டுகின்றார் தேவர்.
        சீவகனும் இலக்கணையும் ஒருங்கமர்ந்திருந்த திருமணப் 
        பந்தர் தேவர் உள்ளத்தே மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. 
        அம்மண்டபத்து நிகழ்ந்த மணவினையை யத் தொகுத்துக் 
        கூறுகின்றார் அவர்.
             
             மணமகளை அழகுபடுத்திய தோழியர் அவளது 
        நிறைநலத்தைக் கண்டார்களாம். அவளிடம் பெண்மை
        யின் பேரெழில் கண்ட அம்மடந்தையர்கள், அவளை 
        அடையத் தாங்கள் ஆண் தன்மையைப் பெற விரும்பினார் 
        களாம். இக்கருத்தைக்கொண்டுதான் பின்பு கம்பர்
        இராமனைக் கண்ட ஆடவர், பெண்மை நலம் விரும்பினர்
        என்று எழுதியுள்ளார் என நினைத்தல் சாலும்.
            
            மணவினைமுறைப்படி நடைபெற்றது. சீவகன் 
        தனக்கு உரியவளாக இலக்கணையை ஏ ற்றுக்கொண்
        டான். இந்நிகழ்ச்சியை ஓர் ஆற்றுப் பெருக்கோடு ஒப்பிட் 
        டுக் காண்கிறார் தேவர். மலையிடைப் பிறந்த ஆறு, பூவும் 
        மணியும் பிறவும் கொண்டு கடலுள் செல்லுமுன் மடு 
        முதலியவற்றுள் பாய்ந்து செல்லல் இயற்கை. இங்கே 
        கோவிந்தன் என்ற மலையில் பிறந்த இலக்கணை என்னும் 
        ஆறு, தன்னுள் பூவும் மணியும் பொருந்தச் சீவகன் என் 
        னும் கடலுள் சென்று சேர்வதற்கு முன் வேள்விச் சாலை  
        என்னும் மடுவுள் புக்கது என்று காட்டுகின்றார் தேவர்.
        அவர் பாட்டு அறிந்து இன்புறத்தக்கதொன்று.
          'கோவிந்தன் என்னும் செம்பொற் குன்றின்மேற்பிறந்துகூர்வேல் 
           சீவகன் என்னும் செந்நீர்ப் பவளமா கடலுள் பாய்வான்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/131&oldid=1484546" இலிருந்து மீள்விக்கப்பட்டது