பக்கம்:சீவகன் கதை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அறம் வென்றது. 131



பூவுந்தி அமுத யாறு பூங்கொடி நுடங்கப் போந்து
தாவிரி வேள்விச் சாலை மடுவினுள் தாழ்ந்த தன்றே.'(2460)

இம்மணத்தை வேள்விமுன் முறைப்படி நடத்திக் காட்டுகின்றார் தேவர். தருப்பையும்,நெருப்பும், பொரியும், ஆன் நெய்யும், பிற பொருள்களும் மணவினைப் பொருள் களாய் அமைகின்றன. அம்மணமியற்றும் வினையாளர் களும் செயலாற்றுகின்றார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் தேவர் அவர் காலத்தில் நடந்த மணச்சட ங்குகளை ஒரு கோவைப்படுத்துகின்றனர். அந்நிகழ்ச்சிகளும் வாறு சடங்குகளும் பெரும்பாலும் இன்றும் நாம் காண்பன வாகவே உள்ளன. எரி வலம் வந்து, அருந்ததி காட்டி, பின்பு மணவறையில் தனித்துக் காதலனும் காதலியும் தங்கினார்கள். அவர்களது காதல் வாழ்வை எங்கும் காட்டியது போன்று இங்கும் காட்டத் தவறவில்லை தேவர். இங்குக் காட்டும் ஊடலும் கூடலும் கலந்த வாழ்வு சிறந்துள்ளது. பல திருக்குறள்கள் எடுத்தாளப் பெறுகின்றன.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலர்ந்த அக்காம வாழ்வில் நம்பியும் நங்கையும் ஒன்றிக் கலந்து நின்ற இன்ப நிலையைப் பல பாடல்களால் விளக்குகின்றார் தேவர். அவர்தம் ஊட டலும் கூடலும் காட்டும் பாடல்கள் எண்ணி இன்புறத்தக்கன. அவற்றுள் ஒன்று கண்டு மேலே செல்வோம்:

சீவகன் இலக்கணையை வைத்த கண் வாங்காது நோக்குகிறான். இமையா நோக்கோடு நிற்றலின் கண்கள் கரிந்து நீரைப் பெருக்குகின்றன. கண்ட இலக்கணையின் எண்ணம் வேறு நெறிச்செல்லுகின்றது. அவள் தன்னை ஒத்த பிற மாதரை எண்ணி நைந்து கண்ணீர் உகுக் கின்றான் கணவன் எனக் கருதுகின்றாள்; கருதிப் 'பேதைமை பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல்!' எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/132&oldid=1484626" இலிருந்து மீள்விக்கப்பட்டது