பக்கம்:சீவகன் கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை

________________

132

பேசிகின்றள்.சீவகன் வருத்தம் அடைகின்றான். இக்கருத்தமைந்த பாடல் இதுவாகும் : ‘மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான் காதலித் திருப்பக் கண்கள் கரிந்துநீர் வரக்கண்டு, 'அம்ம! பேதைமை பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல்!' என்றாள்; வேதனை பெருகி வேற்கண் தீஉமிழ்ந் திட்ட வன்றே.' பட்டினப் பிரவேசம்: (2506) மணவினை முடிந்த பின், உரிமை நாட்டைப் பெற்ற சீவகன் தன் நகர் வலத்துக்குப் புறப்பட்டான்; இராசமா புரத்தை வலம் வந்து, அழகிய தெருக்கள் வழியாகப் பவனி வந்து, தன் மக்களைக் கண்டு, பின்பு தனது மணி மாளிகை செல்லத் திட்டமிட்டான் சீவகன். அவன் திட்டமறிந்த அமைச்சரும் பிறரும் பட்டினப் பவனிக்கு ஏற்பாடு செய்தனர். வ சீவகன் தெரு வழியே செல்லும் போது மக்கள் மகிழ்ந்த சிறப்பை விளக்கும் தேவர், அவன் அழ கினைக் கண்டு கருத்தழிந்த பெண்கள் நிலையைப்பற்றியும் கூற மறக்கவில்லை. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் *பருவப் பெண்களையும், அவர்கள் சீவகனைக் கண்டு கருத் தழிந்த நிலையினையும் கூறி, ஓர் உலாப் பிரபந்தமே பாடி விட்டார் தேவர் என்னுமாறு பல பாடல்களுள் அவர் தம் நிலைகளைக் காட்டுகின்றார்; 'கட்டியங்காரன் என்னும் கூம்பிய மாதரார் முகங்களாகிய தாமரைகள், சீவகன் என்னும் பேரொளி ஞாயிறு தோன்றியதால் மலர்ந்து, தெருக்களாகிய பொய்கையை நிறைத்தன,' என்கின்றார். இவ்வாறு மகளிரும் மைந்தரும் தம் மன்ன வன் பவனி கண்டு வாழ்த்தி வணங்கினர். சீவகனும் தெரு வழியே சென்று அருகன் கோட்டம் சேர்ந்தான். மதி கண் அருகனைக் கண்ணெதிரே கண்ட சீவகன், அடி தாழ்ந்து பணிந் தான்; பலப்பட அவன் புகழ் பாடினான;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/133&oldid=1484424" இலிருந்து மீள்விக்கப்பட்டது