பக்கம்:சீவகன் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்தையும் பட்டத்தையும் கண்ணியையும் கொடுத்துப் பெருமைப்படுத்தினான்; தன்னை வளர்த்த செவிலித் தாயரையும் 'வருக!' என்றழைத்துச் சிறப்பித்தான்; பொன்னும் ஊரும் புனைபூணும் கொடுத்து அவர்களைப் பெருமைப்படுத்தினான்; உடன் நின்ற உரிமைச் சுற்றத் தார்க்கும், மன்னர்களுக்கும் அவரவர் தகுதியறிந்து வேண்டுவன செய்தான்; தன் மாமன் கோவிந்தனுக்குக் கட்டியங்காரனது செல்வம் அனைத்தையும் கொடுத்தான். கண் முன் நின்றவரைநீங்கி, சிந்தையைச் சேணெடுந்தூரம் செலுத்தினான் சீவகன். தூரத்தே சுதஞ்சணன் தோற்றம் வந்தது. தன்னை வித்தையால் மறைத்தெடுத்துக் காத்த அவனுக்கு இராசமாபுரத்தே கோயில் எடுப்பித்து, அக்கோயிலுக்கு வேண்டிய நிபந்தங்களையும் ஏற்பாடு செய்தான். பின்னர்ப் பதுமை முதலிய மனைவியரைச் சீவகன் ஒன்று சேர்த்தான். அனைவரும் தத்தையைப் பணிந்தனர். அனைவரும் ஒன்றினர். அவர்களுக்கு வேண்டிய பெருஞ்செல்வங்களையும் ஊர்களையும் பிறவற்றையும் கொடுத்தான் சீவகன்; நாட்டு மக்களுக்கும் வேண்டுவன செய்தான்; பசியும் பிணியும் பகையும் நீங்கி வளம் பெருகச் செய்தான். நாடு நாடாயிற்று.

அநங்கமாலையின் தோற்றம்:

சீவகனிடம் கட்டியங்காரன் சீற்றம் கொண்டது தேசிகப் பாவையாலேயாம் என் அனங்கமாலை என்ற மேலே கண்டோம். அனங்கமாலை சீவகனை அடையக் காலம் நோக்கிக் காத்திருந்தாள் போதும்! கட்டியங்காரனை விரும்பாளாய், வேறு ஆடவரை நோக்காளாய், இசையும் கூத்தும் பயின்ற அவள், சீவகனை எண்ணித் தவங்கிடந்து நோன்பு நோற்றாள் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/135&oldid=1484815" இலிருந்து மீள்விக்கப்பட்டது