பக்கம்:சீவகன் கதை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 சீவகன் கதை

தனித்தனி ஒவ்வோர் ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். மக்கட்பிறப்பையும் அது குறித்துச் சீவகன் செய்த சிறப்பையும் தேவர் பாராட்டுகின்றா ர். பெற்ற மைந்தரைப் பாராட்டிச் சீராட்டிச் செவிலியர் பருவந் தோறும் செய்யும் சிறப்புக்களைச் செய்து வளர்த்து வருவாராயினர். அவர்கட்கு முறையே சச்சந்தன், சுதஞ் சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் என்ற பெயர்களை வைத்தான் சீவகன். மக்கள் நலம் பல பெற்று வளர்ந்து வந்தார்கள்.நாள் பல கழிந்தன. சோலை நுகர்வு: வாழ்வுக்கிடையில் வேனிற்காலம் வந்து வந்து சென் றது. ஒரு வேனிற்காலத்தே சீவகன் தன் மனைவி மாரோடு பொழில் விளையாட்டின்பொருட்டுச் சோலையில் சென்று தங்கினான். அங்கு அனைவரும் இயற்கை நல மெலாம் துய்த்து மகிழ்ந்து, பின்பு ஒரு பலா மரத்தின் நிழலில் அமர்ந்தனர். அனைவருக்கும் இந்தச் சோலை நுகர்வும் இன்ப ஆட்டும் இறுதி நுகர்வாகவும் ஆட் டாகவும் அமைகின்றன. துறவில் நாட்டம்: சீவகன் அமர்ந்த பலா மரத்தில் ஆண் குரங்கும் பெண் குரங்கும் தங்கியிருந்தன. ஆண் ஒரு பலாப்பழத் தைக் கொண்டு வந்து பிளந்து, இனிய சுளைகளைப் பெண்ணுக்குக் கொடுத்தது. அவ்வேளையில் அச்சோலை காப்போன் வந்து அவ்விரண்டையும் துரத்திப் பழத் தைத் தான் எடுத்து உண்டான். இக்காட்சி சீவகன் உள்ளத்தே உணர்வைத் தந்தது. மந்தி கட்டியங்காரனை ஒத்தும், தோட்டக்காரன் தன்னை ஒத்தும், அரசபோகம் பழத்தை ஒத்தும் நிற்பது உண்மையாயின், யாவும் நிலை யற்றனவென்று எண்ணிற்று அவன் மனம். அதைப் பாட்டாகத் தருகிறார் தேவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/139&oldid=1484589" இலிருந்து மீள்விக்கப்பட்டது