பக்கம்:சீவகன் கதை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

                                       சீவகன் கதை

விளக்கினான். அது கேட்ட சாரணர் அறத்தை அவ னுக்கு உரைப்பாராயினர். பிறவியின் பல்வேறு வகை மானிடப் களையும், அவற்றுள் பெறுதற்கரிய நல்ல பிறவியின் சிறப்பையும் கூறி, அப்பிறவியில் செல்வம், யாக்கை, வாழ்வு ஆகியவற்றின் நிலையாமையையும் விளக் கினர்; பின்னர் நரக கதி, விலங்கு கதி, மக்கட்கதி, தேவ கதி ஆகியவற்றில் உயிர் பெறும் துன்பங்களை விளக்கி ஓதினர்; மேலும் நற்காட்சி, சீலம், தானம், வீடுபேறு ஆகியவற்றின் சிறப்புக்களையும், உயிர் அவற்றை நாடிப் பெறவேண்டிய பயன்களையும் எடுத்து விளக்கினர்.

அனைத்து மொழியையும் கேட்ட சீவகன், ‘இவ்வாறு உயிர்களை வருத்தும் வினைக்குக் காரணம் யாது? அதினின்றும் விடுதலை பெற வழியுண்டோ?' என்றுவினவினான். சாரணர், 'முற்பிறவிகளின் செயல்களே வினை ஈட்டிற்குக் காரணம்,' என்று கூற, தனது முன்னைப் பிறவி களைப்பற்றி அறிய விரும்பினான் சீவகன். அவன் உளம் அறிந்த சாரணர், அவனது முன்னைப் பிறவியை உணர்த்துவாராயினர்.

சீவகனது முன்னைப் பிறவி : 'தாதகி என்பதொரு நாடு. அந்நாட்டு மன்னன், பவனமாதேவன் என்பவன், சிறந்த ஒழுக்கச் சீலனாய் வாழ்ந்து வந்தான். அவனுக்கு அசோதரன் என்ற மகன் இருந்தான். அவ்வசோதரன் மணம் செய்துகொண்டு மகளிருடன் சிறந்து வா வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அசோ தரன் நீர் விளையாடலைக் குறித்துச் சோலைக்குச் சென் றான். அச்சோலையின் தடாகத்தே இருந்த வெண்டாமரை மலரிலே இரண்டு அன்னக்குஞ்சுகள் ஒளித்திருந்தன. அவற்றைக் கண்ட தேவியர் அவ்விளவன்னங்களைப் பிடித்துத்தர வேண்ட, அசோதரன் ஓர் ஏவலாளன் வழி அவற்றைப் பிடித்துக் கொடுத்தான். மனைவியரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/141&oldid=1484066" இலிருந்து மீள்விக்கப்பட்டது