பக்கம்:சீவகன் கதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் துறவும்

                                              141

அவற்றை ஏற்றுத் தம் மார்போடணைத்து; மாளிகை கொண்டு சென்று, வளர்த்து வந்தனர்.

'நாட்சில செல்ல, மன்னன் பவனமாதேவன் அன் னக் குஞ்சுகள் அசோதரன் மனைவியர் மூலம் சிறைப்பட் டதை அறிந்து நடுநடுங்கினான்; மைந்தனை அழைத்து அறிவுரை கூறினான்; பெற்ற அன்னங்களிடமிருந்து அவ்விளவன்னங்களைப் பிரித்த கொடுமையைக் கூறி, அவை பெற்ற துன்பம் வரும் பிறவிகளில் தாமும் பெற நேருமே என்பதையும் விளக்கினான்.

'தந்தையின் அறவுரைகளைக் கேட்ட அசோதரன், உடனே தன் மனைவியரிடம் சென்று அன்னங்களை விடு வித்துத் தடாகத்தில் செலுத்தினான்; மேலும், தந்தை எவ்வளவு தடுத்தும் கேளாது அரச வாழ்வை வெறுத் துத் துறவை மேற்கொண்டு, தவமேற்சென்றான். பின்பு அவ்வசோதரனே மறுமையில் ஸகஸ்பார கற்பத்து இந் திரனாயிருந்து வாழ்ந்து, அடுத்துச் சீவகனாய்ப் பிறந் தான்; அன்னக் குஞ்சுகளைத் தாயிடமிருந்து பிரித்துச் சிறை செய்தமையின், தானும் அவ்வாறு பிரிந் து சிறைப் படும் நிலையைப் பெற்றான்,' என்று சீவகனது முன்னைப் பிறவியைச் சாரணர் அவனுக்கு அறிவுறுத்தினர்.

அனைத்தையும் அறிந்த சீவகன்," அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கினன். சாரணர் இருவரும் அவனை வாழ்த்தி, விசும்பு ஆறாக விண்ணிடைச் சென்று மறைந் தனர்.

அரசைத் துறத்தல் : சாரணர் உரைத்த அறவுரைகளை அனைவரும் கேட் டனர், சீவகன் அருகிலிருந்த தேவிமார் தம் தலைவன் துறப்பானோ என்ற எண்ணத்தால் சிந்தை மாழ்கினர். அவர்தம் கண்கள் நீர் சொரிந்தன. சீவகன் அவர் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/142&oldid=1484566" இலிருந்து மீள்விக்கப்பட்டது