பக்கம்:சீவகன் கதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

143 சீவகன் கதை கண்டும் அவர்களைத் தேற்றானாய், அவர்களோடு சென்று தன் கோயிலைச் சேர்ந்தான். மாளிகை சென்றதும் மங் கைமார் வருத்தமேவிப் புலம்பினர். சீவகன் தன் தம்பி யாகிய நந்தட்டனை அழைத்து வரப் பணித்தான். அவ் வாறே பணியாட்கள் அழைத்து வர, நந்தட்டனும் வந்து, சீவகன் அடி வணங்கி, அழைத்த காரணம் வினவினான். சீவகன் தான் துறக்க விரும்பியதையும் அரசபாரத்தை நந்தட்டனே தாங்கவேண்டுமெனவும் கூறினான். ஆனால், நந்தட்டனோ, அதற்குச் சிறிதும் இசையானாகித் தானும்

உடன் துறப்பதாகக் கூறினான். 
        சீவகன்  சிறிது சிந்தித்தான்; தன் மகன் - காந்தருவ
தத்தை பெற்ற தனயன் - சச்சந்தன் - அரசாளத் தகுதி
பெற்ற நல்ல வயது எய்தியுள்ளதை நினைத்தான்;

'அவனை அழைத்து வருக,' என்று ஏவலருக்கு ஆணை யிட்டான். அவனும் விரைந்து வந்து தன் தந்தையைக் கண்டான். வந்த மைந்தனை முன் இருத்தி, அவனுக்கு உணர்த்த வேண்டிய அரசநெறிகள் பலவற்றையும் உணர்த்தினான் சீவகன்; ஆட்சி செலுத்த வேண்டிய அரசநெறிகள் பலவற்றையும் உணர்த்தினான். ஆட்சி செலுத்த வேண்டிய முறையைச் சீவகன் வாயிலாகத் தேவர் பல பாடல்களால் நன்கு ,விளக்குகின்றார்.

அவற்றுள்,

‘பால்வளை பரந்து மேயும் படுகடல் வளாக மெல்லாம் த கோல்வளை யாமல் காத்துன் குடைநிழல் துஞ்ச நோக்கி
    நூல்விளைந் தனைய நுண்சொற் புலவரோடு அறத்தை ஓம்பின்
 மேல்விளை யாத இன்பம் வேந்தமற் றில்லை கண்டாய்.'
(2906)
நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம் நீருயிர் இரண்டும் செப்பில்
 புல்லுயிர் புகைந்து பொங்கும் புழங்குஅழல் இலங்கு வாட்கை
  மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலம் தன்னுள் நாமவேல் நம்பி என்றான்.'
(2908)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/143&oldid=1484599" இலிருந்து மீள்விக்கப்பட்டது