பக்கம்:சீவகன் கதை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோனநிலை:

மணநூலாய்த் தொடங்கி, மணநூலாய்க் காட்டி, மண நூலாகவே முடிக்க விரும்பிய தேவர் சீவகன் கேவல மடந்தையோடு இரண்டறக் கலந்த நிலையினை,

  'கேவல மடந்தை யென்னும் கேழ்கிளர் நெடிய வாட்கண்
   பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னெரு பாக மாகக்
   காவலன் தான்ஓர் கூறக் கண்ணிமை யாது புல்லி
   மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கி னுனே.

ஏன்று கூறி முடிக்கின்றார். சீவகன் அவ்வாறு சிறந்த வயில் பிறவாப் பெருநெறி அடைந்தான். அவன் வழி காட்டத் துறவு நிலையேற்ற தேவிமார் எண்மரும் தூய துறவற நெறியினின்றும் சிறிதும் வழுவாதவராய் இருந்து இந்திர பதவிகளைப் பெற்றுச் சிறந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/148&oldid=1484117" இலிருந்து மீள்விக்கப்பட்டது