பக்கம்:சீவகன் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 15 ற்ற படுத்தப்பட்டு ஒவ்வொரு வகையில் நகரத்துக்கு மும் தோற்றமும் அளித்து விளங்கின. இவ்வாறாய பெரு நகரத்து நலம் நிறைந்த மக்கள் வாழ் தெருவுக்கு வந்த வுடன் தேவர் அம்மக்கள் வாழ் மாளிகைகளிலுள்ள மகளிர் செயல்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்க் கின்றார். மகளிர் பந்தாடுகின்றனர் ஒரு புறத்தே; தம் உடலில் ஈரம் உலர்த்துகின்றனர் ஒரு புறத்திலே; கணவரோடு கலந்து மகிழும் மாதர் ஒரு புறத்திலே ; உடற்கும் குழற்கும் உரிய வாசனை இடுவார் ஒரு புறத் திலே; தமக்கும் தம் கர் ருக்கும் மாலை தொடுப்பவர் ஒரு பக்கத்திலே; சாந்தும் பிறவும் பூசுவார் ஒரு புறத் திலே. இப்படிப் பலப்பல மாடங்களில் பல்வேறு மகளிர் மகிழ்ந்து வாழும் பெருந்தெருக்களைக் கொண்டது அப் பெருநகர். . அந்நகரத்தே இரவு பகல் இல்லையென்று எழில் படக் கூறுகின்றார் தேவர். பகற்காலத்தைப் போன்றே இரவிலும் மாந்தர் பலர் உறங்காராய் வானோரெனக் கண் விழித்துள்ளனர். இரவே துயின்றிலது. மேலும், அந்நகரில் முழவும் சங்கமும் இடைவிடாது முழங்குகின்றன; விழாவும் வேள்வியும் இடைவிடாது நடைபெறுகின்றள. சங்கநிதி பதுமநிதி போலும் செல் வங்கள் நகர் எங்கும் நிறைந்து நலம் செய்கின்றன. இத்தகைய இயற்கை எழில்களையும் அணி நலங்களையும் கண்டுகொண்டே நெடுந்தூரம் நகரத்துக்குள் செல்வோ மாயின், எதிரிலே நம்மால் அளவிட்டுரைக்க முடியாத அத்துணைப் பேரழகு வாய்ந்த ஓர் உயர்ந்த பெருங் கோயில் தோன்றும். அதுவே சீவகன் தந்தையும் அவன் முன்னோரும் வழிவழி இருந்து வாழ்ந்து வளம் பெருக்கி நாட்டை ஆண்டு நலம் புரிந்து சிறந்த அர சிருக்கையாகும். அப்பெருங்கோயிலின் எழில் நலம் தேவரால் அழகுபடப் பாராட்டப்படுகின்றது. நகரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/16&oldid=1484647" இலிருந்து மீள்விக்கப்பட்டது