பக்கம்:சீவகன் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும்

பிறப்பும் வளர்ச்சியும் 17 கொள்ளை ணத்தால் தருமனாகவும், ஈகையில் சிறந்த காரணத்தால் வருணனாகவும், பகைவர்தம் உயிரைக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டும் வீரனாதலால் இயம னாகவும், அரும்பண்புகளைக்கொண்டு வீணர்களால் அடைய முடியாத காரணத்தால் அருகனாகவும், மங்கை யர் மணக்க விரும்பும் பேரழகு பெற்றவனாதலால் மன்மத னாகவும் திருத்தக்க தேவரால் கின்றான். இதோ அவர் வழக்கு: உருவகப்படுத்தப்படு 'தருமன் தண்ணளி யால்;தனது ஈகையால் வருணன்; கூற்றுஉயிர் மாற்றலின்; வாமனே அருமை யால்;அழ கிற்கணை ஐந்துடைத் திரும கன்திரு மாநில மன்னனே.' (160) இவ்வாறு எல்லாப் பண்புகளும் ஒரு சேரப்பெற்ற சச்சந் தனைக் கொண்டுவந்து கண்முன் நிறுத்திய தேவர், அவ னது வாழ்க்கைத் துணையை உடனே புகழத் தொடங்கி விடுகின்றார். பல பாடல்களில் அவர் அவன் தேவி யைப் பாராட்டிப் பாராட்டிப் பேசும் பண்பு படித்து இன் புறற்பாலதாகும். பெண்ணருங்கலமாகிய விசயையை ஒரு காட்சியாக அமைத்து, உலகத்துக்கே பெண்கள் எவ்வாறு அழகும் அறிவும் பிற நல்ல பண்புகளும் பெற்று விளங்க வேண்டுமென்பதை அவர் காட்டுகின் றார். தலை முதல் அடி வரை ஒவ்வோர் உறுப்பாக அவர் காட்டும் காட்சி, பிற்காலத்தில் தோன்றிய பெண் களின் அழகுகளை விளக்கும் பல சாமுத்திரிகா லட்சண நூல்களுக்கெல்லாம் பிறப்பிடமாக அமைவதை அறிந் தார் உணர்வார். நாமும் இரண்டொன், று கண்டு மேலே செல்வோம்: விதயதேசமென்பது வளத்தால் சிறந்தது; வற்றாத பெருஞ்செல்வம் மிக்கது. அந்நாட்டுக்கு மன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/18&oldid=1484649" இலிருந்து மீள்விக்கப்பட்டது