பக்கம்:சீவகன் கதை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீவகன் கதை

18 சீவகன் கதை சீதத்தன் என்பவன். அவன் சச்சந்தனுக்கு மாமன் முறையாக வேண்டும். அச்சீதத்தன் மகளே விசயை என்னும் பெண் கொடி. அவள் பிறந்து மொழி பயின்று பின் காதல் சிறந்து பொற்கொடி பூத்தது ஒத்து எல்லா எழில் நலங்களும் ஒருங்கே அமையப்பெற்று விளங் கினாள். அவளுடைய கண்களுக்குத் தேவர் காட்டும் உவமை பழங்கால இலக்கியங்களிற்கூடக் காண முடி யாத ஒன்று என்னலாம். பரந்தது பாற்கடல். அதன் நிறம் வெண்மை. அவ் வெள்ளிய கடலில் அசையும் ஆலிலைமேல் மாயோன் பள்ளி கொண்டுள்ளான். அவனது நிறமோ, கருமை. ஆம்! அவ்விசயையின் காதளவு நீண்டுலவும் கண்ணிற் கருமணி, மாயோனை ஒத்தது. அதைச் சுற்றிலும் பரந்த வெண்மை மாயோனைச் சூழ்ந்த பாற்கடலை ஒத்துள்ளது. திருமால் அப்பாற்கடலிடையிலிருந்தே பரந்த உல கத்தை அளக்கின்றான். விசயையின் கருமணியும் இருந்தவிடத்திலேயே சுழன்று உலகை அளக் கிறது. " இந்த உவமை நயத்தைச் சிந்தாமணிக்கு உரை எழுத வந்த நச்சினுர்க்கினியர் நன்கு புலப்பட எடுத்து விளக்குகின்றார். கண்கள் சேல் மீனைப் போன்றன; வரி பரந்துள்ளன. அவை நஞ்சமும் அமிர்தமுமாகி மாறிமாறி நிற்கின்றன. அவள் கண்ணை எண்ணும் போது 'இரு நோக்கு இவளுண்கண் உள்ளது, என்ற வள்ளுவர் வாக்கை நினைத்திருப்பார் தேவர். ஆம்! அவள் விரும் பிய காதலரை நோக்கின், அது அமிர்த நோக்காகும்; அல்லாரை நோக்கின், நஞ்சாலாய பொல்லாத நோக் காகும். இப்படி அழகமைந்த கண்களோடு முற்றும் துறந்த முனிவரையும் மயக்கத்தில் ஆழ்த்தும் வகையில் வளர்ந்தாள் வி சயை. இத்தகைய அழகே உருவான தன் மாமன் மகள் விசயையை மணந்து வாழும் சச்சந்தன், அவளைப் பிரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/19&oldid=1484650" இலிருந்து மீள்விக்கப்பட்டது