பக்கம்:சீவகன் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

சீவகன் கதை

பதிலாகத் தானே அரசகாரியங்கள் அனைத்தையும் கவனிக்கலானான். காலம் சுழன்றது. அறிவும் அறமும் பொருந்திய நெஞ்சினராயினும், பெறுதற்கரிய செல்வம் பெற்ற பின் சிந்தனை மாறுதல் உலக இயற்கையாகும். அந்த நெறி யிலே கட்டியங்காரன் மனநிலையும் செல்லலாயிற்று. அதை அறிந்தோ, அறியாமலோ, சிலர் அரசனுக்கு அவனது ஆட்சி முறை மாற்றம் தகாதது என்றும், அதனால் மக்கள் மன்னனை வெறுக்கும் நிலையில் உள் ளார்கள் என்றும் டுத்துக் காட்ட விரும்பினர்; எனி னும்,நேருக்கு நேர் நின்று அரசனிடம் பேச அஞ்சினர். அவருள் நிமித்திகன் என்னும் அமைச்சன் ஒருவன், மன் னர் தவறு செய்யுங்கால் அதனைத் தடுத்து இடித்து உரைத்தல் அமைச்சர் கடன் என்பதை அறிந்தவன். எனவே, அவன், 'எது வரினும் வருக!' என்று அஞ் சாது அரசன் முன் சென்று, ஆட்சி முறை மாற்றம் சற்றும் பொருந்தாது என்பதை எடுத்து விளக்கினான்? முற்காலத்தே பெண்களின் இச்சை வயப்பட்டு நிலை கெட்டு அழிந்த தேவர்களையும் மக்களையும் அச்சச்சந்தன் மனக்கண் முன் கொண்டு வந்து து நிறுத்தி, அவன் செய்ய வேண்டிய அரசியற்கடமைகளை வற்புறுத்தினான். எனி னும், சச்சந்தன் கட்டியங்காரனிடம் தன் முழு நம்பிக்கை யும் வைத்திருந்த காரணத்தால்,

<

{{block_center|<poem>எனக்குயி ரென்னப் பட்டான் என்னலால் பிறரை இல்லான் முனைத்திற முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான் தனக்கியான் செய்வ செய்தேன்; தான்செய்வ செய்க; ஒன்றும் மனக்கினு மொழிய வேண்டா வாழியர் ஒழிக!' என்றான்

}}.'</poem> (205)

இங்ஙனங் கூறி, வந்த அமைச்சன் வாயடைத்துப் போமாறு செய்தான். இந்த நிகழ்ச்சியைக் கண்ட அரு இருந்த உருத்திரதத்தன் என்பவன் அரசனை விளித்து, இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/21&oldid=1485704" இலிருந்து மீள்விக்கப்பட்டது