பக்கம்:சீவகன் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சீவகன் கதை பாலும் கொடுமைகளே வெற்றியுறும். மனி தனி தனது அதனாலேயே வாழ்விலும் பொது வாழ்விலும் கொடுமைகள் உண்டாகின்றன. ஆனால், அறிவையும் பிறவற்றையும் செலுத்தும் மனிதன், உணர்வு பெற்று அனைத்தையும் அடக்கி, அறிவு வழித் தன் ஆற்றலைக் காட்டத் தொடங்குவானானால், அப்போது அவன் மட்டும் வாழ்வதன்றி, அனைத்துலகமுங்கூட வாழும். ஆம்! இது வரை காமம் முதலியவற்றால் கட்டுண்ட சச்சந்தன் மனம் அறிவினால் பற்றிக்கொள்ளப்பட்டது; அறிவு வென்றது. அவ்வறிவின் வழியே உண்டான மயிற் பொறியே நமக்குச் சீவகனை அளித்தது. தேவர் தம் பெருநூலுக்குத் தக்க தலைவனைப் பகைவரிடமிருந்து பிரித்துக் கொடுத்தது அந்த அறிவு. வாழ்க அவ் வளஞ்சால் அறிவு! மயிற்பொறி : அறிவு தெளிவு பெற்றபின் அரசன் சிந்திக்கலானான். கட்டியங்காரன் ஒருவேளை நாட்டை ஆளவேண்டுமென்ற ஆசையால் படை திரட்டித் தன் மாளிகையை வளைத்துத் தன் உயிருக்கு இறுதி தேடவும் கூடும் என்ற எண்ணம் பிறந்தது. அவனோடு போர் செய்து தான் ஒரு வேளை மாள நேரிடினும், தன் மனைவியும் அவள் வயிற்றில் வளரும் கருவும் கெடலாகாது என்றது அவன் மனம். ஒரு வேளை வயிற்றில் உள்ள கரு ஆண் மகனாகப் பிறந்து தன் பெயரையும் தனது குலப் பெருமையையும் என் றென்றும் நிலை நிறுத்தவும் கூடும் என்ற உணர்வும் பிறந்தது. எனவே, போர் நேரின் அரசியைக் காப் பாற்ற வழி ஆராய்ந்தான்; அறிவனும் துணைசெய்தான். அறிவெனும் அமைச்சன் வழி அரசன் உள்ளத்து உருவானதுதான் மயிற்பொறி. வானில் பறக்கும் வித்தை இன்று ஏற்பட்டதன்று. எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த இலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/25&oldid=1484665" இலிருந்து மீள்விக்கப்பட்டது