பக்கம்:சீவகன் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ச்சியும் 27

பிறப்பும் வளர்ச்சியும் 27 எனினும், அவன் உள்ளம் மாறவில்லை. அவன் சச்சந் தனைக் கொல்லவே முடிவு செய்துவிட்டான்; தனக்கு நீதி கூற வந்த அமைச்சரை வெகுண்டான்; 'மன்னவரைத் துறக்கம் ஆள வைப்பன்!' என்று சூளுரைத்தான் ; அரச னுக்கு உற்றாராயின வரையெல்லாம் விலங்கிட்டுச் சிறை செய்தான்; தன்னை ஒத்த தன் நண்பர்களுக்குச் சிறப்புச் செய்தான்; படையைத் திரட்டினான்; பாராளும் மன்னன் தனித்திருந்த பரந்த சோலை சூழ்ந்த பெருமாளிகையோடு கூடிய நகரின் ஒரு பக்கத்தை வளைத்துவிட்டான். போர் முரசு அதிர்ந்தது. விசயையோடு மேல் விளைவதை ஒருவாறு எண்ணி யிருந்த வேந்தன் சச்சந்தன், போர் முரசு கேட்டதும் வெகுண்டெழுந்தான்; புறக்கதவங்களையெல்லாம் தாளி டப் பணித்தான்; தன் வாளை நோக்கினான்; கட்டியங் காரன் போர் குறித்து வந்ததை எண்ணிப் பேசிச் சிரித்தான். அவன் அருகிலே அன்பில் வளர்ந்த விசயை வாடிய முகத்தோடு இருந்தாள். அவளன்றி வேற்றியாது அது வரை இருந்த மன்னன், அறிவு வரப்பெற்றான்; அவளை 'அஞ்சல்!' என்று தேற்றினான்; அவளை 'உடனே இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்க!' என்று கூறினான். (269) 'சாதலும் பிறத்தல் தானும் தம்வினைப் பயத்தின் ஆகும்; ஆதலும் அழிவும் எல்லாம் அவைபொருட்கு இயல்பு கண்டாய்; நோதலும் பரிவும் எல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே! பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி!... 'தொல்லைநம் பிறவி எண்ணின் தொடுகடல் மணலும் ஆற்ற எல்லைய; அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் செல்லும்அக் கதிகள் தம்முள் சேரலம்; சேர்ந்து நின்ற இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே; இரங்கல் வேண்டா." (270) என் று பலவாறு அறிவுரைகளும் அன்புரைகளும் கூறி அவளைத் தேற்றினான்; மயிலூர்தி சித்தமாய் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/28&oldid=1484668" இலிருந்து மீள்விக்கப்பட்டது