பக்கம்:சீவகன் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 சீவகன் கதை காரணத்தினாலே உடனே விசயை அவ்வூர்தியிலேறி அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இவைகளையெல்லாம் கேட்ட விசயை, உளமும் உட லும் ரு சேரச் சோர்ந்தாள்; தம் காதல் வாழ்வையும் கடந்த காலத்தையும் எண்ணி எண்ணி ஏங்கினாள். எண்ணிப் பயன் என்? தன் கணவனைப் பணிந்தாள்; அவன் முகம் நோக்கினாள்; ஆற்றாது அரற்றினாள்; மயிற் பொறி ஏறினாள்.பறந்தது மயிற்பொறி! மன்னன் முடிவு: தன் உயிரனைய விசயையை விமானத்து ஏற்றி அனுப்பிய பின் அரசன் கட்டியங்காரன்மேல் படை தொடுத்தான். அவனது மறைந்த வீரமெல்லாம் உருப் பெற்று உயர்ந்தது. அவன் தன் படைகளையெல் லாம் கொண்டு போருக்குப் புறப்பட்டான். உலகை அழிக்கும் கடவுளைப் போன்று அமைந்தது அவன் தோற்றம். அரசன் போருக்குப் புறப்படவே, அவனைச் சூழ்ந்து அவனுக்குக் காவலாயிருந்த நாற்படைகளும் புறப்பட்டன; கட்டியங்காரன் படைகளோடு மோதின. பயன் என்? பல நாள் முயன்று அரசனைக் கொல்ல வேண்டும் என்ற சூழ்ச்சியிலே படை திரட்டிய அக் கட்டியங்காரன் பெரும்படை முன் இச்சிறு படை என செய்யும்? எனினும், போர் வல்ல பெருமன்னன், ஒருவனாகவே நின்று, எதிர்த்த படைகளையெல்லாம் கொன்று குவித்து, மேன்மேலும் சென்றுகொண்டே தான் யிருந்தான். அவனது வாள் வீச்சினால் வீழ்ந்தவர் பலர். மடிந்த யானைகள் பல. இவ்வாறு மன்னன் ஒருவனே படைகளுக்குப் பெருஞ்சேதம் விளைவிப்பதைக் கண்ட கட்டியங்காரன், அவன்மேல் அம்பைச் சொரிந் தான். அவனைச் சேர்ந்த வீரர்களெல்லாம் முதலில் விரைந்து போர் தொடங்கின போதிலும், அரசனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/29&oldid=1484669" இலிருந்து மீள்விக்கப்பட்டது