பக்கம்:சீவகன் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

         சீவகன் கதை

விசயையும் கேட்டாள்; மயங்கினாள்; கணவன் நிலை எண் எனவே, ணிக் கருத்தழிந்தாள்; பொறி இயக்கம் நின்றது. அம்மயிற்பொறியும் அப்படியே மெள்ளக் கீழே இறங் கிற்று.

சீவகன் பிறந்தான:

   பிணப்புகை மலிந்த அந்தச் சுடுகாட்டில் ஒரு பக் கத்தில் அம்மயிற்பொறி இறங்கி நின்றது. விசயை அச் சுடுகாட்டில் தனியளானாள். செல்வச் சிறப்பிலெல்லாம் சிறந்து நல்வினைப் பயனை அனுபவித்த விசயை, செல் வத்தோடே தீவினை தொடர்ந்து வருவதை உலக மக்க ளெல்லாம் உணரும்பொருட்டு அரச போகத்தை இழந்து, அச்சுடுகாட்டுள் அனாதையைப் போலத் தனிமையில் ஏங்கி நின்றாள். வீழ்ந்த தன் கணவனை நினைந்து நைந் தாள்; விழுந்தாள்; மயக்கமுற்றாள்.
    மயக்கத்திலேயே எத்துணை காலம் இருந்தாளோ! அவள் அறியாள். பின்பு தன் நினைவு வந்தபோது பக்கத் தில் பாலகன் அழுகுரல் கேட்டாள்; பரிந்தாள்; தனக்கு மகன் பிறந்திருப்பதை உணர்ந்தாள்; பிள்ளையைக் கண்ட பெருமகிழ்ச்சியிலே தான் கொள்ளை கொடுத்த அரச போகத்தையும் பிற எல்லாவற்றையும் மறந்தாள். அச் சீவகன் பிறந்த சிறப்பை,

'இருள்கெட இகலி எங்கும் மணிவிளக் கெரிய ஏந்தி (304) அருளுடை மனத்த வாகி அணங்கெலாம் வணங்கி நிற்பப் பொருகடற் பரிதி போலப் பொன்னனுன் பிறந்த போழ்தே மருளுடை மாதர் உற்ற மம்மர்நோய் மறைந்த தன்றே.' என்று சிறப்புற எடுத்துக் காட்டுகின்றார் தேவர்.அரசி ருக்கையில் அந்தப்புரத்தில் சேடியர் பலர் பணி செய்யக் காத்துக்கிடக்க, பணியாளர் பலர் ஓடி ஆடி அறிவிக்கப் பிறக்க வேண்டிய பெருமகன், இங்கே இந்தச் சுடுகாட்டில் கேட்பாரின்றி வாடிய. அன்னையின் வயிற்றிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/31&oldid=1484077" இலிருந்து மீள்விக்கப்பட்டது