பக்கம்:சீவகன் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ச்சியும் 31 வந்து தோன்றினான். இடுகாட்டில் தோன்றிய அனாதைக் குழந்தை எப்படிச் சிந்தாமணியின் கதாநாயகன் ஆயி னான் என்பதை மேலும் தொடர்ந்து காண்போம்: சுடுகாட்டில் அரசி: அரண்மனையின் அந்தப்புரத்தே ஆயிரம் பேர் ஆடிப் பாடிப் பணி செய்ய மகவு பெற வேண்டிய அரசி, அந்த இராசமாபுரத்துச் சுடுகாட்டிலே தனியாய் இருந்து தன் மகனைப் பெற்றதை எண்ணி எண்ணி ஏங்கினாள்; அரச னுக்கு மகன் பிறந்தால் அவன் என்னென்ன வகையில் சிறப்புக்கள் செய்வான் என்பதை ஒன்றன் பின் னறாக நினைத்துப் பார்த்தாள். 'கறைபன் னீராண் டுடன்விடுமின்; காமர் சாலை தளிநிறுமின்; சிறைசெய் சிங்கம் போன் மடங்கிச் சேரா மன்னர் சினம் அழுங்க உறையும் கோட்டம் உடன்சீமின்; ஒண்பொற் குன்றந் தலைதிறந்திட்டு இறைவன் சிறுவன் பிறந்தான்என்று ஏற்பார்க்கு ஊர்தோ றுய்த்தீமின்.' (306) என்றும் இன்னும் பலவாறும் அரசன் மகன் பிறக்குங் கால் செய்ய இருந்ததை எல்லாம் எண்ணினாள்; பின்பு அம்மைந்தன் அச்சுடுகாட்டில் கேட்பாரற்றுத் தனியாய்ப் பிறந்து வாடுவதை நினைத்துப் புலம்பினாள். அவளை ஆற்றுவார் ஒருவரும் இலர். வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக ஒவ்வாச் சுடுகாட்டு உயர்அரங்கின் நிழல்போல் நுடங்கிப் பேயாட எவ்வாய் மருங்கும் இருந்துஇரங்கிக் கூகை குழறிப் பாராட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/32&oldid=1483911" இலிருந்து மீள்விக்கப்பட்டது