பக்கம்:சீவகன் கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இவ்வா றாகிப் பிறப்பதோ
இதுவோ மன்னர்க்கு இயல்வேந்தே!(309)

என்று புலம்பிற்று அவள் வாய்.

விசயை வாய் புலம்ப, கண் நீர் சொரிய, உளம் நைந் துருகப் பக்கத்தில் கிடந்த பச்சிளங்குழந்தையைக் கண் டாள். அக்குழந்தை ஒன்றையும் அறியாது வாய் குழப் பிற்று. அதைக் கண்டதும் சிந்தாமணியே!' என்றுகூறி அரற்றினாள். அன்னை அருகே இருந்த மரங்களும் அவள் அழுகைக்கு ஆற்றாது வருந்துவன போலப் பனி நீராகிய கண்ணீரைச் சொரிந்தன. அந்த வேளையில் க சூதிரவனும் உலக நலம் பேணும் நன்மகன் பிறந்தான்! கவலை விட் டது! என்பான் போல மேற் கடலுள் மூழ்கினான். அந்தி படர்ந்தது.

தெய்வத் தோற்றம் :

இருள் படரும் அந்த நேரத்தில் என்ன செய்வ தன அறியாது வாடினாள் அரசி. அதே வேளையில் அவ்வனவனத்துறைதெய்வங்களுள் ஒன்று, அவ்விசயையை விட்டு நீங்காது அருகேயிருந்து பணி செய்துகொண் டிருந்த சண்பகமாலை என்னும் நே தாழியின் வடிவு கொண்டு அவள் பக்கம் வந்தது. வந்த தெய்வம் அவ ளுக்குப் பலப்பல ஆறுதல் மொழிகள் கூறித் தேற் றிற்று. பிறந்த மைந்தன் பின்பு சிறந்தவனாவான் என் றும், அவன் வாய்மொழிப்படி உலகம் நடக்கும் என்றும், அவள் கணவனைக் கொன்ற கட்டியங்காரனைப் பழிக்குப் பழி வாங்குவான் என்றும், அத்துறையில் அவனை வல்லவனாக்கும் ஒருவன் அங்கு வந்து அப்போதே அக் குழந்தையைக் கொண்டு செல்வான் என்றும், ஆகவே அவர்கள் அங்கில்லாது அப்பால் சென்று மறைய வேண்டும் என்றும் தெய்வம் கூறிற்று. அது கேட்ட விசயை, பிறந்த மைந்தனையும் விட்டு நீங்க வேண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/33&oldid=1483962" இலிருந்து மீள்விக்கப்பட்டது