பக்கம்:சீவகன் கதை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



              பிறப்பும் வளர்ச்சியும்

33 டுமோ!' என நினைத்தாள்; எனினும், அவனது பிற் வாழ்வில் பெரிதும் ஆசை கொண்டு, அத்தோழி யின் சொற்படி நடக்க இசைந்தாள்; குழந்தைக்குப் பால் கொடுத்து விரலில் மோதிரம் இட்டுச் சீராட்டினாள். தோழியாகிய தெய்வம் நல்ல ஆடையாலாகிய மென் மைப் படுக்கையில் அக்குழவியைக் கிடத்திற்று. அரசி சிலம்பொலிக்க, கிண்கிணி ஆர்ப்ப, மெல்ல மெல்ல அப் பால் நகர்ந்தாள். அக்காட்சி ‘நன்மணி யீன்று முந்நீர் சலஞ்சலம் புகுவது' (317) ஒத்தது. தூரத்தே சென்று அவள் மறைந்து குழந்தையை நோக்கிக்கொண்டிருந் தாள்.



மைந்தன் கந்துக்கடனுக்கு மகனாதல்:
 கந்துக்கடன் என்பான் இராசமாபுரத்து வாழ்ந்த சிறந்த வணிகன்; செல்வாக்கு மிக்கவன்; நல்லழகனுங் கூட. அவன் அந்த இரவு தொடரும் இருள் நேரத்தில் தன் இறந்த மகனை ஈமத்திட அங்கு வந்து சேர்ந்தான். வந்தவன் வழி ஓரத்தே ஒப்பற்ற இளஞாயிறு போன் விளங்கும் பச்சிளங்குழவியைக் கண்டான். கண்டதும் விருப்பம் மிகுந்து அருகில் சென்றான்; தன் குழவியை அப்பால் கிடத்தினான்; வாய் விட்டரற்றும் இளங்குழந் தையைக் கையில் எடுத்தான்; அதன் கையில் உள்ள மோதிரம் ஒரு வேளை அதனை உணர்த்துவதாகும் என்று அதைக் கழற்றி மறைத்துக்கொண்டான். அவன் கையில் கொண்ட அளவிலே அக்குழந்தை தும்மிற்று. அதே வேளையில் 'சீவ' என்று ஒரு குரல் வாழ்த்திற்று.
வாழ்த்திய குரலையே நன்னிமித்தமாகக் கொண்டு கந்துக்கடன் அவ்வழகிய குழந்தையை எடுத்துக்கொண்டு அப்பால் ஏகினான். அக்காட்சியைக் கண்டு நின்ற அரசி அரற்றினாள்; பிரியும் பிள்ளையை நினைத்தாள்; எனினும், தெய்வம் தேற்றத் தேறினாள்; 'எம்பகைவனான கட்டியங்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/34&oldid=1484614" இலிருந்து மீள்விக்கப்பட்டது