பக்கம்:சீவகன் கதை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரனைக் கொன்று வெற்றி பெறுவாயாக!'என்று வாழ்த்தினாள். கந்துக்கடனும் 'மாமணி விழுத்தகு மகனொடு' (325) விரைந்து தன் வீட்டிற்குச் செல்லலானான்.

கந்துக்கடனின் இறந்த மைந்தனும் பச்சிளங் குழந்தையே போலும்! எனவேதான் விரைந்து வீடு நோக்கி வந்த அவன் அக்குழந்தையைத் தன் வீட்டில் கொண்டு சென்றதும் தன் மனைவியை அழைத்து, மகன் தீதின் நீங்கினான்! நீ வருந்தற்க!' என்று சொல்லு கின்றான். அவளும் அவலமும் அழுகையும் நீங்கி, மனம் மகிழ்ச்சி பொங்கக் குழவியை வாங்கிக் கொண்டாடினாள். அப்போது வலம்புரிகள் இசைத்தன; வாத்தியங்கள் முழங்கின; பெண்கள் பொன்னை வாரி வழங்கினார்கள்.

இறந்த மைந்தன் பிழைத்தான் என்பதை அனை வரும் அறிந்தனர். அன்றே அரசனான கட்டியங்காரனும் அறிந்தான்; தன் அரசை விரும்பி ஏற்ற கந்துக்கடனுக்கு உண்டான மகச்சிறப்பை எண்ணி, அவனுக்குப் பல வரிசைகள் ஈந்தான். பாவம்! அவன் அறியான், அக்குழந்தையே தனக்கு இறுதி தேடித்தரும் சீவகன் என்பதை கந்துக்கடனும் தன் மகிழ்ச்சிப் பெருக்கில் வேண்டு வார்க்கு வேண்டியன ஈந்து, பெருஞ்சிறப்புச் செய்தான். இது நிற்க அரசமாதேவிஅரசமா என்னாள் என்பதைக் காண்போம:


வனத்துறை தெய்வமானாள்: தன் மகன் கண்ணிலிருந்து மறைந்ததும் அரசி மிக்க வருத்தமெய்தினாள். என்று அவனைக் காண்போம்' என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் குடி கொண்டது. எண்ணி எண்ணி இறுதியில் மண்மேல் மயக்கமுற்று வீழ்ந்தாள். வீழ்ந்தவளை அருகே கூனி வடிவில் நின்றிருந்த தெய்வம் எடுத்துத் தேற்றி, மயக்கம் தெளிவித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/35&oldid=1484658" இலிருந்து மீள்விக்கப்பட்டது