பக்கம்:சீவகன் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக இயல்புகளையெய்லாம் விளங்க எடுத்து உரைத்தது அப்போதே அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு இருள் நிலையிலேயே யாரும் காணாதபடி அருகேயுள்ள ' அமரிகை 'யாற்றின் கரைக்குச் செல்லவேண்டுமென்பதையும் உரைத்தது. அந்தப் பேராற்றங்கரையிலிருந்து ஐம்பது யோசனைத் தூரத்தில் உள்ள தரணி திலகம் ஊரைப்பற்றிக் கூறி, அங்குச் செல்லல் தேவையில்லை என்பதை உணர்த்தி, தண்டகாரணியம் என்னும் காட்டிலுள்ள தாபதப் பள்ளியில் சென்று தங்க வேண்டுமென்பதையும் அது எடுத்துரைத்தது. கூனி உரைத்த சொல்லை மறுக்கமாட்டாதவளாகிய அரசி, அப்படியே தாபதப்பள்ளியை நாடிப் புறப்பட்டாள். அரசியும் கூனியும் வழிகடந்து ஆற்றங்கரை சென்று சேர்ந்தனர். செல்லும் வழி முழுவதும் அக்கூனி பல அறநெறிகளை அரசிக்குக் கூறிக்கொண்டே : சென்றாள். ஆற்றங்கரையை அடைந்த போது இரவு அகன்றது; பகல் தோன்றிற்று. அக்காட்சி தீவினை அகல நல்வினை வந்து தோற்றும் காட்சியை ஆசிரியருக்கு நினைவூட்டிற்று. , 'இருள், தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய அல்லல் வெவ்வினை போல அகன்றதே,' (343) என்று கூறுகின்றார் தேவர். அரசியும் கூனியும் அவ்வாற்றிடைக் குறையிலே வந்து பொழிலிடைத் தங்கியிருந்தனர். பின்பு அரசியை அங்கிருந்து அழைத்துச்சென்று தாபதர் தங்கும் பள்ளியுள் சேர்த்தாள் கூனி. தாபதப் பள்ளியைச் சேர்ந்த அரசி அத்துறவு நெறிக் கேற்ப அமைந்து ஒழுகுமாறு அவள் அணி முதலிய வற்றை அகற்றினர் அங்குள்ள தாபதப் பெண்டிர். அவளது அழகினை வாயாரப் புகழ்ந்து அவளது அழகுக்கு அழகு செய்யும் அணி ஆடை முதலியவற்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/36&oldid=1484787" இலிருந்து மீள்விக்கப்பட்டது